பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

151


வளைவுகள் வாசகங்கள் விளம்பரங்கள் செய்திருந்தேன். டெல்லியில் தபால் தந்தி துணைநிலை அமைச்சரான B. பகவதியும், உள்துறை துணையமைச்சரான திருமதி மரகதம் சந்திரசேகரும், அண்ணாவுடன் அளாவளாவி, சொற்பொழிவும் ஆற்றினர். போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் S. R. பாஷ்யமும் பங்கேற்றார் இங்கே!

அப்போது சென்னை மாநில முதல்வர் காமராஜர். அவரை நான் ஒரு முறைதான் சந்தித்துப் பேசியுள்ளேன். இந்த மாநாட்டுக்கு முந்திய மாதம் அவர் மாயூரம் வந்திருந்தபோது,என் தெருவிலுள்ள நகராட்சிப் பயணியர் விடுதியில் சந்தித்து, எமது மாநாட்டுக்கு வருமாறு அழைத் தேன். நிற்க வைத்துத்தான் பேசினார். “ஏதப்பா நேரம்?” என்றார். உங்கள் பெயரைப் போட்டுக் கொள்கிறேன். நேரம் கிடைத்தால் வாருங்கள்! அண்ணா நிச்சயம் கலந்துகொள்வார்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் வரவில்லை!

பொதுக்கூட்டம் மிகமிகப் பிரம்மாண்டமாயிருந்தது; டெல்லி அமைச்சருக்கும், எங்கள் பொதுச் செயலாளருக் கும் புதுமையான அனுபவம். அஞ்சல் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் பொதுச் செயலாளராயிருந்து அறிவின் முத்திரையை இந்தியா முழுவதும் பொறித்துள்ள எங்கள் அண்ணன் A. S. ராஜன் M.A. அங்கு சொற்பொழிவாற்றினார்.

அண்ணாவின் பேருரையில், RMS ஊழியர்கள் ஒடுகின்ற வண்டிகளில் ஆடுகின்ற பெட்டிகளில் ஆடாமல் நின்றபடிக் கண்களை மூடாமல் பணியாற்றும் அவலமான நிலைமைகளைக் கவலையுடன் எடுத்துக் கூறி, பணியின் தரம் உயரவும், அஞ்சற் பிரிப்போரின் துயரம் குறையவும்: RMS Mail Vanகளை ஏர் கண்டிஷன் செய்யவேண்டும் என்று, மத்திய அரசுக்கு, அங்கு வந்துள்ள இரு அமைச்சர்கள் வாயிலாக எடுத்துரைத்து வாதாடினார்கள்,