பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அண்ணா—சில நினைவுகள்


குறைந்த வாடகைக்கு அளித்திருக்கிறார். பொதுக்குழுவை இங்கேயே நடத்தியிருக்கலாம், முன்பே தெரிந்திருந்தால், என்றார் சம்பத்.

பொன்னம்பலனார் புதிதாக வந்தவர்களை எனக்கும் குடும்பத்தாருக்கும் அறிமுகம் செய்தார். என் துணைவி யார் பொறுப்பில் அவர்களை உட்புற அறையில் தங்கச் செய்தேன். கே. ஆர். ஆரும், காமாட்சியும் பிரம்மாண்டமான திண்ணையை அலங்கரித்தனர்.

“என்ன கருணை ஆனந்தம்? நான் ஒரு சொந்த வேலையா இப்ப வந்திருக்கேன். 2, 3 நாள் தங்குவோம். நீ உன் dutyயை adjust செய்துகொண்டு எங்களோடு இருக்க முடியுமா?” என்று அண்ணா என்னைக் கனிவுடன் வினவிட-இதைவிட எனக்கு வேற ஒண்னும் முக்கியமில்லே அண்ணா. அதெல்லாம் சரிசெய்து கொள்வேன்” என்றேன். “சரி, அப்படியானால்-நமது செம்பனார் கோவில் கணேசனை உடனே வரவழைக்க முடியுமா?” என்றவுடன், ‘இதோ ஆளனுப்புகிறேன்’ என்ற நான் ராசகோபாலனை அழைத்து, “அடேய், விளநகர் கணேசன் இங்கே லட்சுமி ஸ்டுடியோவில் இருக்கிறாரா பார். இல்லா விட்டால் நீயே செம்பனார் கோயில் போய், கையோடு அழைத்துவா” என்று விரைவாக அனுப்பினேன்.

அதற்குள் அண்ணா வந்திருக்கும் செய்தி எப்படியோ பரவிட, கழகத்தார்களான கிட்டப்பா, பழனிச்சாமி எல்லாரும் என் வீட்டில் குழுமிவிட்டனர். அண்ணா, அவர்களைப் பார்த்து அன்புடன், “நான் ஒரு சொந்த வேலையா வத்திருக்கேன். இரண்டு நாள் இருப்பேன். அந்த வேலை முடிந்த பிறகு பார்க்கிறேன்” என்று அனுப்பி வைத்தார்.

கணேசனும் வந்துவிட்டார். தம்முடன் வந்தவர் களிடம் கணேசனை அறிமுகம் செய்த பின், அவர்களை யெல்லாம் உள்ளே போகச் சொன்னார். “ரொம்ப சங்கட