பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதலமைச்சருக்கு முதல் விருந்து


“காங்கிரசைப் பூண்டோடு அழிப்பதுதான் இனி என். வேலை. எந்தக் காங்கிரசை இந்தத் தமிழ் நாட்டில் வளர்த் தேனோ, அந்தக் காங்கிரசை இந்தத் தமிழ் நாட்டில், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி ஒழிக்கப் பாடுபடுவேன். வருகிறேன்! என்று காஞ்சி மண்ணில் 1925-ல் கர்ச்சித்துத், தடியை ஓங்கித் தரையில் தட்டிச் சூளுரைத் தார் தந்தை பெரியார். அந்தக் காஞ்சித் தளபதியோ, தந்தையின் கொள்கைச் செல்வங்களின் வாரிசல்லவா அதனால், தந்தையின் சூளுரையைத் தனயன் மெய்ப்படுத்துவேன் என வெஞ்சினங் கூறித் தனிவியூகம் அமைத்துத், தளராது போரிட்டு, 1967-ல் காங்கிரசைப் புறங்கண்டு விட்டாரே!

6. 3. 1967 அன்று அண்ணா பதவி ஏற்பதாக அறிவிப்பு வந்து விட்டது. ஆர். எம். எஸ். ஊழியர்களின் நீங்காத் துணைவரல்லவா? நான்கு மாதங்களுக்கு முன்புதானே மருத்துவமனையில் இருந்து, யாருக்கும் தெரியாமல் புறப்பட்டுக், காய்ச்சலின் உச்சக்கட்டத்திலும், காரில் ஏறிச் சென்னையிலிருந்து சோலையார்பேட்டை வந்து திரும்பி னார். வேறு எப்போதும் அண்ணா, இவ்வாறு உடல் நலிவு ஏற்பட்டபோது அய்யோ, ஒத்துக்கொண்டோமே, போய்த் திரவேண்டுமே என்று போனதில்லையே!

சரி. அண்ணா வெற்றியை நாம் எப்படிக் கொண்டாடு வது? ஒரு விஷயத்தில் நாம் முந்திக் கொள்வோமே என்று. என் மாநில சங்கத் துணைத்தலைவர் திருச்சி எஸ்.ஏ. ரகீம், ம்ாநிலச் செயலாளர் C. நம்மாழ்வார் ஆகியோருடன் துங்கம்பாக்கம் இல்லம் சென்றேன். அன்று 5.3.67. கையில்

அ.-12