பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

189


மக்களோ என்ன நெனப்பாங்க? ஒங்களாலே இதை, எப்படித் தாங்கிக்க முடியுது?” என்று. அவர் சொன்னார் -“ஷேக்ஸ் பியர் Play ஜூலியஸ் சீசர் படிச்சோமே! வெறும் பாடமாவா படிச்சோம்; படிப்பினைண்ணு நெனைச்சிதானே படிச்சோம்! ‘நீயுமா புரூட்டஸ்’ணு சீசர் கேட்டான்-நானும் கேட்க வேண்டியதுதானா? ‘நீயுமா நடராஜன்? நீயுமா சின்னராஜ்? நீயுமா தர்மலிங்கம்ணு: ஆனா, நான் கேட்கலை கேட்கமாட்டேன். ஏண்ணா; நான் சீசரில்லை! வெறும் அண்ணாத்துரை!” என்றார்ட் பொறுமையின் பிறப்பிடம், அமைதியின் இருப்பிடம், கண்ணியத்தின் உறைவிடம்-எண்ணற்ற சோகச் சிதறல்களை மென்று விழுங்கிவிட்டு!