பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

219


சி. கே. சின்னராஜூ இன்னொரு பேச்சாளர். எங்கள் வரவேற்புக்குழுத் தலைவரோ நாடாளுமன்ற உறுப்பினரான அரூர் முத்து அவர்கள்.

ஜோலார்பேட்டைக்குச் சென்னையிலிருந்து எங்கள் மாநிலச் சங்க நிர்வாகிகள் 19.11.66 அதிகாலை பிருந்தாவனம் எக்ஸ்பிரசில் செல்லத் திட்டமிட்டிருந் தோம். இவ்வாறு புறப்படுவதற்கு முதல் நாள், நுங்கம்பாக்கம் சென்று, அண்ணா அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, அவர்கள் எப்படி, எப்போது ஜோலார் பேட்டை வந்து சேருவார்கள் என்பதனை அறிந்து வரலாமென, மாநிலச்செயலாளர் நம்மாழ்வாரும் நானும் சென்றோம். ராணி அண்ணியார் மிக்க வருத்தத்துடன், “ஏம்ப்பா ஒங்களுக்குத் தெரியாதா? ஒங்க அண்ணனுக்கு ரொம்ப ஜூரம் வந்து, வீட்லெ ரெஸ்ட்டா இருக்க முடியாதுண்ணு, இசபெல்லா ஆசுபத்திரியிலே சேர்ந்திருக்காங்களே” என்றார்கள்.

இடி விழுந்தாற்போலிருந்தது எனக்கு மாநாட்டுக்கு அண்ணா வரமுடியாமற் போய்விட்டதே என்ற ஏமாற்றம் ஒர்புறம்! அண்ணா செயிண்ட் இசபெல் நர்சிங் ஹோமில் சேரவேண்டிய அளவுக்குச் சுரம் வந்துவிட்டதே என்ற கவலை மறுபுறம்! உடனே மயிலாப்பூர் விரைந்தோம். அண்ணா தனியே படுத்திருக்க, அருகே நிழல் நின்றிருந்தது? (நண்பர் சி. வி. ராசகோபால்) சென்னையில் இச் செய்தி அதிகம் பரவாததால், மருத்துவமனையில் மக்கள் கூட்டம் திரளவில்லை.

அண்ணாவைத் தொட்டுப் பார்த்தேன். உடல் அனலாய்க் கொதித்தது. “எப்படியண்ணா சுரம் வந்தது? என்ன சுரமாம்?” என்று கேட்டேன். ஃபுளுமாதிரித் தெரிகிறது. 104 டிகிரி ஏறிவிட்டது. சரி போகட்டும். நீ எப்போ ஜோலார்பேட்டை போகிறாய்? என்று வினவிய போது, அண்ணாவின் நினைவு அந்த நிலையிலும் குன்றா