பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

அண்ணா-சில நினைவுகள்


வதைத் தராத ஆட்சியை மாற்றுவதாக இருக்கட்டும்!” என்று முடித்தார் அண்ணா.

அண்ணா பேசி அமர்ந்ததும் வலது காதில் நான் இவ்வாறு கிசுகிசுத்தேன். ஏண்ணா நீங்க இந்த நெலை மையிலே, இவ்வளவு தூரம் Risk எடுத்து Car travel பண்ணி வந்தீங்க? உள்ளதைச் சொல்லுங்கண்ணா!” என்று.

“வேற ஒண்ணுமில்லே அய்யா. ஒரு ஆள் வரமாட்டேன் என்றது. இன்னொரு ஆள் வந்திருக்கிறது. இது இரண்டுக்கும் பயந்துதான் வந்தேன்” என, உள்ளத்தின் எரிச்சலை அடக்கமாக உணர்த்தினார் அண்ணா.

நான் புரிந்து கொண்டேன்!

“என்னங்க சி. வி. ஆர்! நீங்க அண்ணா வர்றதைத் தடுத்திருக்க வேணா மா? காய்ச்சலோட இவ்வளதூரம் அழைச்சி வந்துட்டீங்களே?” என நான் அவரைக்கடிந்து கொண்டபோது, “அட, நீ ஒண்ணுய்யா! திடீருண்ணு கார்ல ஏறுண்ணார். சிட்டியிலேதான் எங்கேயோ போகக் கூப்பிடறார்ணு ஏறினா, கார் நேர இங்கே வந்துதான் நிக்குது” என்றார் அவர்!