பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிரிந்ததும், சேர்ந்ததும்

1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. அந்த நேரத்தில் பெரியாரைத் துறந்து அண்ணா தன்னுடன் இணைந்தவர்களைக் “கண்ணிர்த்துளிகள்” என்று தலைப்பிட்டு “திராவிட நாடு” இதழில் வாரந் தோறும் பட்டியல் வெளியிட்டார். மணியம்மையாரை மணம் புரிந்தபின், பெரியார் இரண்டு முறை மாயூரம் வந்து ஒய்வாக என் வீட்டில் சில நாள் தங்கினார்கள், அம்மையாருடன்.

நான் இந்தக் கால கட்டத்தில் அண்ணாவையும் சந்திப்பேன். “அய்யாவைப் பார்த்தாயா? வந்திருந்தாரா? என்ன சொன்னார்?” என்று பெருந்தன்மையுடன் அண்ணா என்னிடம் விசாரிப்பார். ஆயினும், நான் “கண்ணிர்த் துளிகள்” பட்டியலில் சேரவில்லை. 1932.ம் ஆண்டுக்குப் பிறகுதான் தி. மு. க. வளர்ச்சியில் பங்கேற்றேன்.

என்னைப் பொறுத்தவரையில், திராவிடர் கழகத்தி விருந்து பகைமையால் பிறந்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. காலத்தின் கட்டாயத்தினால், அண்ணா ஒர் அரசியல் பிரிவை ஏற் படுத்தியுள்ளார் என்றே கருதினேன். இதற்குச் சான்று பகரும் சில எடுத்துக்காட்டுகள், என்னால் இருதரப் பினின்றும் காண்பிக்க இயலும்,

தி. மு. க. தோன்றிய இரண்டொரு ஆண்டுகட்குப்பின் ஒருநாள் அண்ணா, சம்பத், நான் மூவரும் இருக்கிறோம். அப்போது வெளியாகிய ஒர் திரைப்படத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் ‘எதுவேண்டும் சொல்