பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வியப்பு-வியப்பிலும் வியப்பு!

டுவண் அரசின் ஊழியனாய், மாயூரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, நான் அலுவல் புரிந்து வந்த போதிலும், நான் அதிக நாள் சென்னை வாசியாகத்தான் வாழ்ந்தேன். இங்கெனக்குச் சோற்றுக் கவலையில்லை, கலைஞர் வீடு என் வீடாயிருந்ததால்! அதிலும், தி. மு. க. ஆட்சி அமைந்த பிறகு, நான் சென்னை மாநகரில் தங்கும் நாள் அதிகரித்துவிட்டது. அரசு அலுவலராயிருந்தால் ஒய்வு பெற்றிருக்க வேண்டிய வயதில் அண்ணா முதலமைச்சரானார். வழக்கத்திற்கு மாறாக அதிகாலை எழுந்திருத்தல், மன உளைச்சல், புதிய பொறுப்புக்கள், கோப்புகள் பார்த்தல் இப்படியாக இயல்புக்கு மீறி உழைத்ததால் அண்ணா உடல் நலம் சீர்கெட்டது வெகு விரைவிலேயே!

அண்ணா அமெரிக்காவில் அறுவை சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னரும் அரசுப்பணிகளைக் கவனித்து வந்தார். ஒரு நாள் “விடுதலை” ஆசிரியர் என் நண்பர் வீரமணியும், நாகரசம்பட்டி நண்பர் என். எஸ். சம்பந்தமும் அண்ணாவைக் காண வீட்டுக்கு வந்தனர். “உக்காருப்பா!” என்றார் அண்ணா. வீரமணி உட்கார்ந்தார். சம்பந்தம் உட்காராமல் ஏதோ சொல்ல முயன்றார். “என்ன சம்பந்தம்?” எனஅண்ணா கேட்கவும், ஆத்திரம் மேலிட்ட வராய், “என்னங்கண்ணா! எங்க நாகரசம்பட்டி பள்ளிக் கூடத்துக்கு அய்யா பெயரை வைக்கிறதுக்கு நாவலர் அனு மதி குடுக்க மறுத்து file ஐத் தூக்கி மூஞ்சியிலே விட்டெறிஞ் சிட்டாருங்க!” என்றார் சம்பந்தம். அவரது சினத்தை ஆற்ற எண்ணி, “நெஜம்மா மூஞ்சியிலேவா விட்டெறிஞ் சார்?” எனக் கேட்டார் அண்ணா. உடனே புன்சிரிப்புடன் “இல்லிங்க; டேபிள் மேலேதான் போட்டார்.” என்று