பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

229


கூறிய சம்பந்தத்தைப் பார்த்து “சரி உட்காருங்க. அங்கே நம்ம சொக்கலிங்கம் (தனிச் செயலாளர்) இருப்பார்; பாருங்க!” என அண்ணா சொல்லவும், சம்பந்தமே சென்று அவரை அழைத்து வந்தார். அவரிடம் அண்ணா சொல்கிறார். “என்னங்க - நாகரசம்பட்டி - அதாவது தர்மபுரி டிஸ்ட்ரிக்ட்லெ - இவுங்க ஊர்ல. ஒரு ஹைஸ்கூல் இருக்குது. அதுக்குப் பெரியார் ராமசாமி உயர்நிலைப் பள்ளி அப்படிண்ணு பெயர் வைக்கிறதுக்காக ஒரு லட்சத்து இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்லெ கட்டடம் கட்டித் தந்திருக்காங்க. எழுபத்து அஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தாலே டோனர் (நன் கொடையாளர்) சொல்ற பெயரை வைக்கலாம்னு நாம G. O. போட்டிருக்கோமே. அதை நாமே மீறலாமா! அந்த எஜுகேஷன் மினிஸ்டர் பீ. ஏ. நம்ம பண்டரிநாதன் இருப்பார். அந்த ஃபைலைக் கொண்டு வரச் சொல்லி, இந்த G. O. வையும் quote பண்ணி, இதன் பிரகாரம், பெரியார் பெயரைச் சூட்ட அனுமதிக்கப்படுகிறதுண்ணு order போடச் சொல்லுங்க உடனே” என்று ஒரே மூச்சில் இவ்வளவும் சொல்லி முடித்தார் முதலமைச்சர் அண்ணா.

பிறகு அவர்கள் இருவரிடமும் பேச்சை மாற்றினார். “என்னா வீரமணி! அய்யா எப்படியிருக்கார்? இந்த டுர் (tour) போடும் போது கொஞ்சம் பாத்துப் போடுங்கப்பா! மொதல் நாள் திருநெல்வேலி, மறுநாள் தர்மபுரிண்ணு எவ்வளவு distance! அதிலேயும், எங்கே போனாலும் அங்கங்கே நம்ம தோழர்கள் இருக்காங்க, அவுங்க வீடுகளிலேயே சூடா, பத்தியமா சாப்பிடணும். இப்ப தர்மபுரி மாவட்டத்திலே எங்கே கூட்டம்னாலும், நம்ம சம்பந்தம் வீட்லெதான் சாப்பாடுண்ணு வச்சிக்கணும். நான் அய்யாவோட சேர்ந்தப்போ, இப்ப எனக்கு என்ன வயசோ(60) அந்த வயசு அய்யாவுக்கு. அப்பவே வயிற்றுக் கோளாறு; பேதியாகும்; பொருட்படுத்தமாட்டாரு. அப்ப நல்ல சாப்பாட்டுக்கு வழியில்லே! அப்பவே அய்யா இறந்து போயிருப்பாரு. ஆனா மணியம்மா வந்த பிறகுதான்