பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

231


நம்முடைய இயக்கத்தை வெறும் பயனையும் பதவியையும் எதிர்பார்க்கும் அரசியல் குழுவாக அமைக்காமல், பற்று பாசம் அன்பு அரவணைப்பு-இவற்றினடிப்படையில் அமைத்தார்களே! இயக்கத் தலைவர்களை வேறு யார் அய்யா என்றும் அண்ணா என்றும் வாஞ்சையுடன் அழைக்க முடியும்? அதனால்தானே பதினெட்டாண்டு இடை வெளிக்கும் பின் ஒரு முதலமைச்சர் தானே வலிந்து சென்று தன் தந்தையைக் கண்டார். ராஜாஜி வருத்தப் படுவாரே என்றார் ஒருவர். சென்னை வந்த பின்பு பார்க்கக்கூடாதா, திருச்சிக்குச் சென்று பார்க்க அப்படி என்ன அவசரம் என் றார் வேறொருவர். “என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப் படுத்தியவரே அவர்தான். முதலமைச்சரானதும் அவரை நான் பார்க்காவிட்டால், அது மனிதப் பண்பே ஆகாது” என்று சொல்லிவிட்டார் அண்ணன்.

“அவர் என்னுடைய தலைவர். நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன். இன்றும் அவரையே தலைவராகக் கொண்டு தான் பணியாற்றி வருகிறேன்” என்றார் திருச்சியில். “தமிழ் நாட்டின் முதல் பேராசிரியரே பெரியார்தான். அவருடைய கல்லூரியில் பயின்றுவந்த மாணவர்கள் என்பது ஒன்றுதான் எங்களுக்கு உள்ள பெரிய தகுதி” என்று காஞ்சித் தலைவரே நாகரசம்பட்டியில் கூறினார். “தமிழகத்திற்கும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும், இன்னும் உலகிற்கே என்று கூடச் சொல்லலாம், பெரியார் செய்திருக்கின்ற அரிய பெரிய காரியங்கள், ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சி உணர்ச்சிகள், ஓட விட்டிருக்கின்ற அறிவுப்புனல், உலகம் என்றுமே கண்டதில்லை. இனியும் காணப் போவதில்லை. இந்தியாவின் தேசியமொழி இந்திதான் என்று சொன்னவுடன் “தேசியம் என்பது மகா புரட்டு. இந்தியா என்கிறீர்களே அது மிகப்பெரிய கற்பனை. அவையிரண்டையும் உடைத் தெறிவதுதான் என்வேலை” என்றாரே பெரியார்! இரண்டு