232
அண்ணா—சில நினைவுகள்
நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை இருபது ஆண்டுகளில் அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் putting centuries into capsules என்பார்களே அதுபோல” என்றார் அண்ணா.
பெரியாரின் கருத்துகளுக்கு சட்டவடிவம் தருவதற் காகத்தான் பதவியில் இருப்போம், எனத் திட்டவட்டமாகக் கூறித்தான், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட சம்மதம் தந்தார் அண்ணா.
அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்தது, மணியம்மை யாரை அவர் திருமணம் செய்து கொண்டதால்தான் என்ற கருத்தை நான் எப்போதும் மறுப்பவன். இதற்குச் சான்றாக அரூரில் 12. 7. 1968 அன்று அண்ணா பேசியதை நினைவு கூர்வோம்:- “என்னுடைய நண்பர்கள் எல்லாம் நான் பிரிந்து சென்றுவிட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாளில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூடத் தவறு. இந்த நாட்டு அரசியலை, கமக்கு நேர்மாறான கருத்து உடையவர்களிடம் கொடுத் துவிட்டு, அவர்களுக்கு காம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து, அதனைக் கைப்பற்றியும் இருக்கின்றேன்”
30.8.68 அன்று தர்மபுரியில் பெரியார் சிலைதிறப்பு விழா. இதற்குத் தேதி கேட்பதற்காக முன்பு ஒரு நாள் சம்பந்தம், அண்ணாவிடம் வந்து சென்றார். இப்போது அண்ணாவுக்கும். உடல் நலமில்லை. அய்யாவுக்கும் உடல் நிலை சரியில்லை. அதனால் ஒத்திவைத்திருக்கின்றோம். எனறு சொல்வதற்காக விடுதலை வீரமணியுடன் சம்பந்தம் வந்திருந்தார். அவர்களிடத்தில் அண்ணா அய்யாவும் அடிக்கடி ஹைக்கோர்ட் ஜட்ஜ் நியமனம் சம்பந்தமாநிறைய எழுதறார். ஏதாவது செய்யனும். நீதிபதிகள் யாரார், எப்ப ரிட்டையர் ஆகுறாங்க மற்ற particulars எல்லாம் எனக்கு