பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

233


வேணுமே, வீரமணி?” என்றார் அண்ணா. “இதோ! பத்து நிமிஷத்திலே போயி டைப் அடிச்சி குடுத்தனுப்புறோங்க” எனப் புறப்பட்டார்கள் இருவரும். “என் பெயரைக் கவர்மேல் எழுதி, நேராக என்னிடம் தரச் சொல்லுங்க!” என்றார் அண்ணா. “அதென்னத்துக்குங்க அவ்வளவு பயம்? நாங்களே கொண்டு வருகிறோம்” எனச் சென்றவர்கள் அரைமணியில் உண்மையாகவே கையில் Type செய்த தாளுடன் திரும்பி வந்தார்கள்!

“விடுதலையில் இவ்வளவு particularsம் readyயா வச்சிருக்கீங்களா?”

“இல்லீங்க! அய்யாவோட டயரியில இருந்து எழுதிக் கிட்டு வந்தேன்!” என்கிறார் சம்பந்தம்.

“அடெ; அய்யாவோட டயரியிலே இல்லாத விஷயமே ஒண்ணும் இருக்காது போலிருக்கே?” என வியக்கிறார் அண்ணா!

வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே- என்ற புறநானூற்று வரிகள் என் நினைவில் நிழலாடின.