பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

அண்ணா—சில நினைவுகள்


யில் இருந்தேன். பூரிப்பும் குதூகலமும் தரும் பொங்கல் விழா, அந்த ஆண்டு எங்களுக்கு அமையவில்லை! காரணம், அண்ணாவின் உடல் நலிவு மாத்திரமன்று; என் தங்கையின் கணவர் பழநிவேலு பொது மருத்துமனையிலிருந்ததால், மகிழ்வு மறைந்து போயிற்று!

அண்ணா வீட்டில் அன்று காலையில் இருந்தேன். “பொங்கல் விழாவைக் காஞ்சியில் கொண்டாட வேண்டுமென வீட்டார் பிடிவாதம் செய்கின்றனர். அதனால் போய்விட்டு உடனே திரும்பிவிடுகிறேன்” என்றார் அண்ணா. நாங்களெல்லாரும் வேண்டாம் என்று சொல்விப் பார்த்தோம்; பயனில்லை! “என்னைத் தடுக்காதிங்க! இப்ப கலைவாணர் சிலை திறந்ததும், அங்கிருந்தே நேரே கஞ்சீவரம் போயிட்டு வந்துடறேன்!” என்கிறார் அண்ணா கெஞ்சும் குரலில். அண்ணியாரும் இதை ஆமோதிக்கிறார்.

பொங்கிவரும் கண்ணிரைத் தங்கள் முன்தானையால் துடைத்தவாறு அங்கே நிற்கிறார்கள் சரோஜாபரிமளமும் விஜயா இளங்கோவனும். இந்த இரண்டு மருமகளும் எங்கள் பகுதியிலிருந்து இங்கு வந்தவர்களல்லவா! இவர்களைப் பெண் பார்க்கவும், 30-6-1963-ல் திருமண உறுதிப் பாடு செய்யவும், அண்ணா எத்தனை தடவை மாயூரம் வந்தார்! தான் தஞ்சாவூரின் மாப்பிள்ளை ஆனதோடு, தன் பிள்ளைகளுக்கும் தஞ்சைமாவட்டத்தில் பெண் தேர்ந்தெடுத்தாரே அண்ணா-எங்களுக்கு எவ்வளவு பெருமை!

பரிமளம் சரோஜா, இளங்கோவன் விஜயா திருமணம் காஞ்சியில் 1.9.1963 அன்று. தங்கவேலர் தோட்டத்தில் பெரிய பந்தல். முந்திய நாளிரவு மணமகள் இருவரையும் அழைத்து வரும் நேரத்தில் பெருமழை பெய்து மணப் பந்தலில் சேறு நிரம்பிவிட்டது. அண்ணா மிகவும் வருத்த முற்றார். இந்நிகழ்ச்சிகள் யாவும் என் மனத்திரையில் ஓடுகின்றன.

அவசரமாக ஒடிப்போய் என் பிள்ளைகளை அழைத்து வந்து, வாணி மகாலுக்கு எதிர்ப்புறமுள்ள பெட்ரோல்