பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

241


பங்க்கில் நின்றுகொண்டேன். அங்குதான் கலைவாணர் சிலை திறப்புவிழா; கலைஞர் தலைமையில் சுருக்கமாக நடந்தது. எஸ். எஸ். வாசன், ஏவி. எம்., ஏ. எல். எஸ்., புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், நடிகர் திலீப்குமார் ஆகியோரும் இருந் தனர். இளைத்துக்களைத்து, உருமாறிக் குரல்மாறிப்போன அண்ணா, கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்துச் சிறியதொரு உரையாற்றினார். “எனக்கு முன் பேசிய திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் கலைவாணர் சிலை திறக்க இப்போதுதான் நல்ல நேரம் வந்தது என்றார்கள். அவர்கள் நல்ல நேரம் என்று குறிப்பிட்டது நாங்களெல்லாம் ஆட்சிக்குவந்த இந்த நேரத்தைத்தான் குறிப்பிட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.” என்றார். அந்தப் பொங்கல் திருநாள் முதற் கொண்டுதான் நமது சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று அழைக்கப் பெறுவதற்கான அரசு ஆணையையும் அண்ணா பிறப்பித்திருந்தார்.

இதை நல்வாய்ப்பு என்பேனா.கெட்ட வாய்ப்பு என். பேனா-அண்ணாவின் உரை கேட்ட இந்தப் பெரும் பேறு, பிறகு என்றுமே வாய்க்காது போயிற்றே! தலையே நீ வணங்காய்; இந்தத் தலைமகன் அண்ணாவின் கடமைதனை நினைந்து! கண்காள் காண்மின்களோ, இந்தக் கண்ணியத் தலைவனின் வண்ணத் திருக்கோலம்! செவிகாள். கேண்மின்களோ: நம் சிந்தையில் கட்டுப் பாடெனும் அறவுரை ஒதிய முதல்வனின் கம்பீரக் குரல் மொழி! அந்தோ!

என் மகன் குலோத்துங்கன் சிறு வயதில் ஒரு கதை எழுதினான், அதைப் படித்துப் பார்த்த கலைஞர், “கதை எழுதும் குலோத்துங்கா முதலில் படிப்பைக்கவனி! பிறகு கதை எழுதலாம்” என்று சொல்லிவிட்டார். அடியோடு விட்டுவிட்டான் அவன்! பென்சிலால் ஒவியங்கள் வரைவான். Caricature எனப்படும் உரு வங்கள் அருமையாகத் தி ட்டு வா ன், யாரிடமும் பயிலாமலேயே! அவன், அண்ணா பட்ஜெட் கூட்டத்துக்குப் பையுடன் நடந்து செல்வது போன்ற ஒரு பெரிய

ஆ.-16