பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் அருணானந்தம்

245


பெற்ற ஒரு சிறு நிகழ்ச்சி என் மனத்தில் நிழலாடி, அதன் தொடர்பாய் ஒரளவு மகிழ்ச்சியும், உடனே தொடர்ந்து மனத்துள் நெகிழ்ச்சியும் ஏற்பட்டன.

1962-ல் தஞ்சைத் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரான கலைஞர், விலைவாசி மறியல் போராட்டத்தில் தஞ்சாவூரில் கலந்து கொண்டார். அதனால் மூன்று மாதக்கடுங்காவல் தண்டனை பெற்றார். ஏற்கனவே கல்லக்குடிப் போராட்டத்தில் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்று அடைக்கப்பட்டிருந்த அதே திருச்சி சிறைச்சாலைதான் இப்போதும். ஒரு சிறு மாறுதல் என்ன வென்றால், அப்போது, கலைஞர் சட்ட மன்ற உறுப்பினர் ஆகவில்லை. அதனால் நான் ஒரு முறைதான் சென்று பார்க்க இயன்றது. எனக்கு நல்ல வாய்ப்பு இப்போது. திருச்சி சிறையிலிருந்த கலைஞரைப் பல தடவை பேட்டி காணமுடிந்தது!

கலைஞர் விடுதலையானவுடன் நேரே தஞ்சை சென்று, மக்கள் அளித்த வரவேற்பினை ஏற்று, மீண்டும் திருச்சி, அடுத்த நாள் திருவாரூரில் பொதுக் கூட்டம் என்று ஊர் ஊராகப் போகவே நேரம் சரியாக இருந்தது. அக். 24 விடுதலையான அண்ணா, காஞ்சிபுரத்தில் அப்போது தங்கியிருந்தார்கள். அதனால் அண்ணாவைக் காணத் திருவாரூரிலிருந்து மறுநாள் காஞ்சி புறப் பட்டோம் fiat காரில், ஒட்டுநராகத் திருவரம்பூர் காமாட்சி. காரில் கலைஞருடன் மதுரைமுத்து, முரசொலி செல்வம், நான். திண்டிவனம் அருகில் வரும்போது, பிரேக் பிடிக்காமல், கார் முன்னும் பின்னும் ஒடுகிறது சுற்றிச் சுழல்கிறது.-Control இல்லாமல்! ‘பயப்படாதீங்க’ என்கிறார் காமாட்சி! கடைசியில், ஒரு மைல்கல் மீது மோதித் தானாகவே நின்று விட்டது! ஒருவாறு சரி செய்து கொண்டு, காஞ்சி சென்று அண்ணாவைக் கண்டோம்! சாப்பிடுங்கள்! நானும் சென்னைவருகிறேன். இன்று நமக்கு வரவேற்புப் பொதுக் கூட்டம் இருக்கிறதே!