பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

அண்ணா—சில நினைவுகள்


ஊர்வலமும் உண்டே சேர்ந்து புறப்படுவோம்!” என்றார் அண்ணா,

கலைஞர் விடுதலையாகி மூன்று நாட்களாகிவிட்டன. கோபாலபுரத்தில் அன்னை அஞ்சுகம் அம்மையார், தன் அருமந்த செல்வனிடம் அளப்பரிய அன்பினைச் சுமந்து கொண்டு, அவர் வந்து சேராத ஏக்கத்தைச் சிந்தையில் தேக்கிக்கொண்டு, உண்ணாமல் உறங்காமல், உள்ளும் புறமும் அலைந்து திரிகிறார்.

அண்ணாவுடன் சேர்ந்து நள்ளிரவில் நாங்களனை வரும் போய்க் கலைஞர் இல்லத்தில் இறங்குகிறோம். பொக்கைவாய்ப் புன்சிரிப்புதவழ, அம்மா அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள் “அண்ணா தம்பி! ஒங்க அம்மா ஒங்களெப் பெறுவதுக்கு ஒரு நாள்தான் பிரசவ வேதனைப் பட்டிருப்பாங்கபோல இருக்கு. அதனாலெ நீங்க வேலூர் ஜெயிலிலேயிருந்து விடுதலை ஆனதும், நேர ஒங்க அம்மாவைப் பார்க்க ஒடனே காஞ்சிபுரம் போனிங்க. அப்புறம் போயி வேலூர் கூட்டத்திலே கலந்து கிட்டீங்க. ஆனா, என் பிள்ளையை நான் 27 நாள் பிரசவ வேதனை அனுபவித்த பின் பெற்றேன். அதனால்தான், அது என்னைப்பாக்க இவ்வளவு மெதுவா வருது. திருச்சியிலே விடுதலையாகி மூணு நாளாச்சே மெட்ராஸ் வர்றதுக்கு. நீங்க கேக்கக் கூடாதா?” என்ற தும் அண்ணாவுக்கு ஒரளவு வெட்கமும் வருத்தமும் ஏற்பட்டன, அந்தத் தாயுள்ளத்தின் தவிப்பினை உணர்ந்து. “இல்லேம்மா. என்னாலதான் கருணாநிதி வர்றது லேட்டாச்சு. நானும் சேந்து வந்து, ஒங்களெப் பாக்க விரும்பினேன்!” என்று பேசிச் சமாளித்தார் அண்ணா!

1964 மே 27-சென்னை மத்திய சிறையிலிருந்து திரும்புங்கால் 27 நாள் பிரசவவேதனைச் சம்பவம் நினைவுக்கு வந்தது. அதே நேரம் அத்தகைய அன்பின் திருவுருவாம் அஞ்சுகம் அன்னையார் 1964 சனவரியில்