பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

247


இதே 27 ஆம் நாள் தன் செல்வங்களை ஏங்கவிட்டு மறைந்தாரே, அதுவும் என் சிந்தையைக் கலக்கிற்று, அப்போது அண்ணா வரைந்த கண்ணிர்க்காவியத்திலிருந்து சில பகுதிகளை நினைவு கூரலாமே:

“குறுநகை காட்டும் கண்கள்! பொக்கை வாயிலே ஒர் புன்னகை மூதாட்டி அஞ்சுகம் அவர்கள், சருகு, தளிர் ஆவது போலாகி விடுவார்கள்-தமது மக்களின் மகிழ்ச்சி கண்டு அல்ல, மாடு மனை கண்டு அல்ல. இயக்கச் செய்திகளை, வெற்றிகளைக் கேட்டதும்......

கண்டவுடன்; “மேயர் நம்ம கட்சிதானே வரும்? அதை விடக்கூடாது! புதுசா சட்டம் வருதாமே, என்ன செய்யப் போரீங்க? விலைவாசி குறைக்க எப்ப நடக்கப் போவுது கிளர்ச்சி? பேப்பர்லே இண்ணக்கி நம்ம கட்சி விஷயம் என்னென்ன வந்திருக்குது? நம்ம கட்சியைக் கேலி பண்ணிப் படம் போட்டாங்களாமே பேப்பர்லே. பார்த்தீங்களா, என்ன செய்யப் போறீங்க?” என்ற இது போன்ற கேள்விகளைக் கேட்டு, ஆர்வத்தைப் பொழிந்த ஒரு அன்னையை நான் கண்டதில்லை. தம்பி கருணாநிதிக்கு, இப்படிப்பட்ட தாய்ச் செல்வம் பெற்றிருந்த காரணத்தால்தான்-“நிதி” என்ற பெயரிட் டார்கள் போலும்.

வயது 72 தோற்றம், அப்பழுக்கற்ற கிராமிய முறை! அணிகலன் கிடையாது! அந்த வீட்டிலே மூதாட்டி அஞ்சுகம் அம்மையார், கழக மாநாட்டுக்காக வெளியூரிலிருந்து வரும் தாய்மார்களில் ஒருவர் போல, இயக்கப் பேச்சு ஒன்றிலேயே தமக்குச் சுவை தேடிக் கொண்டு உலவிவந்தார்கள்.

நடமாடிக் கொண்டிருந்த அம்மை இப்போது படமாகிப் போய் விட்டார்கள்...