பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

255


பெரியாரின் கையில் அளித்தார். அய்யா அதைப் பெற்றுக் கொண்டு, மணியம்மையின் கையில் கொடுத்தார். பிறகு அண்ணாவின் பக்கமாகச் சிறிது குனிந்து, அவருடைய இரு கன்னங்களிலும் தமது இரு கரங்களின் விரல்களாலும் தடவிக் கொடுத்து-“ஒண்ணுமில்லிங்க! நீங்க நல்லா இருக்கீங்க! நல்லா இருக்கீங்க!” என்றார் தழுதழுத்த குரலில், ஆனால் கம்பீரங் குன்றாமல்!

காணற்கரிய இந்தக் கண்கொள்ளாக் காட்சியினைஇதன் மாட்சியினை-எவ்வாறு உரைப்பது! எங்கள் அனைவர்க்கும் கண்கள் கலங்கி, நீர் முத்துகள் உருண்டன கன்னங்களில்! வீரமணியும், நானும், எங்கள் மேல் துண்டுகளால் கண்களைத் துடைத்துக் கொண்டோம். மணியம்மையார், புடைவைத் தலைப்பால் முகத்தினைத் துடைத்தார்கள். நாகரசம்பட்டி சம்பந்தம் அழுத்தமான திடசித்தம் உடையவராயினும், அவருக்கே நெகிழ்ச்சி மிகுந்துவிட்டதென்பதை, மகிழ்ச்சியற்ற முகம் தெரிவித்தது.

பிறகு, அண்ணா அடையாறு மருத்துவமனையிலிருந்த போது, அருகிலுள்ள வீரமணியின் இல்லத்தில் தங்கிக் கொண்டு, பெரியார் அடிக்கடி வந்து பார்த்துக் கவலை தேங்கிய முகத்துடன் திரும் பிச் செல்வார் தினந்தோறும்!

2.2.1969 நள்ளிரவில் தேவைப்பட்டால் உடனே புறப்பட்டுச் செல்ல வசதியாக வீரமணி வீட்டு மாடியில் படுக்காமல் கார் ஷெட்டிலேயே படுத்து உற்ங்கிக்கொண்டிருந்த பெரியாரை எழுப்பிய என். எஸ். சம்பந்தம், அண்ணாவின் சேதியைச் சொல்ல, அருகிலிருந்த சுவரில் கையை ஓங்கி அறைந்து, “எல்லாம் போச்சு, எல்லாம் போச்சு” என்று புலம்பிய பெரியார், உடனே மணியம்மை