பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

19


அண்ணாவின் காதில் அரைகுறையாகச் சில சொற்கள் விழுந்திருக்கவேண்டும்!

மாயவரம் ஜங்ஷனில் ரயில்வே புரோக்கர் நடேச படையாட்சியின் இளைய மகன் கிட்டப்பா. ஒரளவு வசதியுள்ள நடுத்தரக் குடும்பம். 1951-ல் பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன், சிதம்பரம் நகராட்சியில் எழுத்தர் வேலை கிடைத்தது. போக மறுத்துவிட்டு, முழுநேரக் கட்சிப் பணியாற்றினார். தொண்டனுக்கொரு உதாரணமாகத் திகழ்ந்த கொள்கைவெறியர் கிட்டப்பா!

நிகழ்ச்சி முடிந்து எங்கள் வீட்டுக்கு வந்தோம். அண்ணா சாப்பிட அமர்ந்தார்கள். பின்னர் வந்து சேர்ந்த கிட்டப்பாவின் குரல் உக்கிரமாக ஒலித்தது. பின்னே என்னங்க? தலைவர் வந்தா மட்டும் மேடையிலே உக்கார வர்றானுங்க! மத்த நாளிலே கழகப் பணிக்கோ, வசூலுக்கோ வர்றதில் லே! இவனுங்களுக்கு ஏன் நாற்காலி?”

“கிட்டப்பாவைச் சாப்பிடச் சொல்லிக் கூப்பிடு” என்றார் அண்ணா என்னிடம். வெளியில் போய் அழைத்ததும் மிகப் பணிவுடன் வந்து, “நான் அடுத்த பந்தியில் சாப்பிடுகிறேனுங்க!” என்று சொல்லி, வெளியே உட்கார்ந்துகொண்டார். முகத்தில் கோபத்தின் ஜ்வாலை தெரிந்தது அப்போதும்!

சாப்பிட்டு முடித்தவுடன், அண்ணா வெளியில் போய் நின்றுகொண்டு, காரை எடுக்கச் சொன்னார். ஊருக்குப் புறப்பாடு என்று நினைத்த மச்சியும் தெருவுக்கு வரவே, “நீ இரு, இதோ வந்துடறேன்” எனச் சொல்லி, “வில்லாளன்! கருணானந்தம்! ரெண்டு பேரும் பின்னாலே ஏறுங்க!” எனவும் பணித்தார் அண்ணா.

கார் புறப்பட்டதும், “இப்படி எங்காவது ஆள் இல்லாத பக்கமாப் போலாம்!” என்று என்னிடம் சொன்னார். ரயில்வே சந்திப்பு சென்று, கடைசிப்பகுதியில்