பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

23


நல்ல மணம், சுவை. ஆனால் அவரெங்கே எங்களைச் சாப்பிட விட்டார்?

நாலு முழ வேட்டியும் நீல்ச்சட்டையும் நீள அங்கவஸ்தி ரமும் புரள, அண்ணாவுக்கு எதிரில் வழக்கம் போல் வாயைப் பொத்திக்கொண்டு நிற்கிறார் சபாநாயகர் சி. பா. ஆதித்தனார்; பந்தி விசாரிக்க அல்ல; தன் கோரிக்கையை முன்வைக்க தனியாகப் பேசவேண்டும் என்கிற நாகரிகமும் தெரியவில்லை; வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்கிற முனைப்பே புலப்பட்டது!

“அண்ணா! எனக்கு இந்தச் சபாநாயகர் பதவி வேணாம். ஏதோ ஒரு மந்திரியா, கடைசி மந்திரியா, கொடுத்தாப் போதும்- என்று இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அண்ணாவேள் குனிந்த தன்ல நிமிராமல் சாப்பாட்டில் கவனமாயிருப்பது போல் பாவனை செய்தார். நாங்களும் செவிகளைச் செவிடாக்கிக்கொண்டு வந்த வேலையை முடித்திதோம். ஒரு வழியாகப் புறப்பட்டு வாயிற்புறம் வந்து காரில் ஏறு முன்பு ஆதித்தனார்—

“அண்ணா! நான் சொன்னது...” எனத் தொடங்குவதை அறிந்து, “கருணாநிதியிடம் பேசுங்க!” என்று சொல்லித் தீர்ப்பு வழங்கிவிட்டார் அண்ணா!

நீண்டநேரமாக அடக்கிக்கொண்டிருந்த ஆவலை வினா வாக்கினேன் நான். “இவரை எப்படியண்ணா ஏற்றுக் கொண்டீங்க? பார்ப்பன ஆதிக்கத்தில் இருக்கும் பத்திரிகை ‘உலகத்தில் இவர் காலூன்றி, ஒரு தமிழர் முன்னேறி வருகிறர்ரே என்கிற மகிழ்ச்சியில், நாம் இவர் ஏடுகளை வாங்கி ஆதரிச்சோம். ஆனா இதற்குமுந்தி ஒரு நாளாவது இவர் நம்மை அங்கீகாரம் (Recognise) செய்ததில்லை. பெரியாரைப் பேராசைக்காரர் போல் கார்ட்டுன் போடுவார். நமீது கட்சியை இருட்டடிப்பு செய்தார் என். வி.