பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

25

போகிறாரோ என்பதில் தந்தை பெரியார் கவனத் துடன், கூடாது கூடாது என்ற எச்சரிக்கையை அடிக்கடி விடுத்து வந்தார்.)

சிந்தனைக்குரிய இந்தக் கேள்வியும் பதிலும் ஒரளவு முடிவுக்கு வரும் நேரம், நாங்கள் நுங்கம்பாக்கம் அவென்யு சாலை ஒன்பதாம் எண்ணுள்ள இல்லம் வந்து சேர்ந்து விட்டோம்.

1969க்குப் பிறகு ஆதித்தனார் அமைச்சராகவும், சிலம்புச்செல்வர் ம. பொ. சி. சட்டமேலவைத் துன்னத் தலைவராகவும், நான் செய்தித்துறை அலுவலராகவும் விளங்கிய காலகட்டத்தில், எங்களிடையே நல்ல இணக்கமும் இறுக்கமும் ஏற்பட்டிருந்தது. ஆதித்தனார் நாள்தோறும் எனக்கு ஃபோன் செய்து ஒருமணி நேரம் பேசுவார். தி.மு.க, ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாளிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். ம.பொ.சியும் அவ்வாறே ஆயினும், என்னிடம் நட்பு பாராட்டுகின்றார் இன்னமும்.