பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

37

ஒவியம். பின்புறம் அண்ணா பூக்காடு” படிக்கும் போட்டோ. ஆனால் (1972-இல்) இரண்டாம் பதிப்பு வெளியானபோது அண்ணன் எங்கே எங்கே??

அண்ணா வேண்டுமென்றே பேச்சைத் திசை திருப்புகிறார்கள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. “சரி யண்ணா! சட்டை போட்டுக்குங்க, படம் எடுக்கலாம்” என்றேன்.

“ஒண்ணும் அவசரமில்லேய்யா. எதிர் வீட்டு மாடியில் போய் மூணுபேரும் ரெஸ்ட் எடுங்க. செல்வம்! நெறய புக்ஸ் இருக்கும், பாரு! மத்தியானம் சாப்பிட்ட பிறகு போட்டோ எடுக்கலாம். அதுக்குள்ள ஆளை வரச்சொல்லி நானும் ஷேவிங் செய்துகொண்டு, குளிச்சி, ரெடியா வந்துடறேன்” என்றார்கள் அண்ணா. நல்லதுதானே ? எங்கள் மூவருக்கும் மறுத்துப் பேச வாயில்லை.

ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் எதிர்மாடிக்குச் சென்றோம். என்ன விந்தை? அங்கே பெரும் புதையல் ஒன்று எங்களுக்காகக் காத்திருந்தது! என்ன அது?

அப்போதெல்லாம் அண்ணா நிறையக் கார்ட்டுன் படங்கள் வரைவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந் தார்கள். அப்படிப் பல்வேறு நேரங்களில் தீட்டிய எண்ணற்ற ஒவியங்கள் அறை முழுக்க இறைந்து கிடந்தன, அவற்றையெல்லாம் மூன்று பேரும் பொறுக்கி எடுத்து ஒழுங்காக அடுக்கி, ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித் தோம். பொழுது போனதே தெரியவில்லை. பசியையும் உணரவில்லை.

உணவுக்கு அழைப்பு வந்தது. அண்ணா முழுமையாக மாறியிருந்தார்கள். பளபளப்பான முகம். வாரி விடப்பட்ட தலை, சலவை வேட்டி சட்டை மேலாடை. சாப்பாடு முடிந்தபின் வீட்டு மாடியிலும் பின்புறமும்