பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பவள வாயில்

Some reminiscences of my association with Anna— அண்ணாவுடன் என் அணுக்கத்தில் சில நினைவுக் குறிப்புகள்-இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நமது தமிழ் மொழிக்கு உள்ள இயற்கையான வளமையினால் "அண்ணா-சில நினைவுகள்" என்று சுருக்கமாகச் சொன்னாலே, இந்நூலின் உள்ளடக்கம் என்ன என்பது புரிந்துவிடும்.

இரண்டு மாதங்கட்கு முன்புவரை இப்படி ஒரு நூல் எழுதுவேன் என நான் எண்ணியதில்லை. 1974-ல் வெளியான "என் அண்ணா காவியம்", இத்தனை ஆண்டுகளாக இரண்டாம் பதிப்பினைக் காணவில்லை. அதனைப் பதிப்பித்தால் போதும் என்று விரும்பினேன். நட்பின் செல்வர் மூவேந்தர் முத்து அப்பணியினைத் தாமே விழைந்து ஏற்றுக்கொண்டார். சிற்சில திருத்தங்களுடன் அஃது இப்போது அச்சாகி வருகின்றது.

சென்ற 15.10.1986 அன்று என்னுடைய 62-ஆவது பிறந்தநாள். அண்ணா வழியில் அதே நோய்க்கு ஆளாகி எதிர்காலத்தைக் கணிக்க இயலாச் சூழ்நிலையில்,