பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அண்ணா—சில நினைவுகள்


சாப்பாட்டுப்பிரியர்; ரசிகர்! அவர் “இந்த இறாலைவிட, அதில் போட்டிருக்கிற மசாலாதான் ரொம்ப ருசி, அண்ணா!” என்கிறார். நானோ என் இலையிலிருந்த இறால் மசாலாவைச் சாதத்தோடு நன்கு பிசைந்து, அண்ணாவின் இலையில் வைத்துச், ‘சாப்பிடுங்கள்’ என்கிறேன். நான் இறால் சாப்பிட்டால் என் வயிறு கோளாறு செய்யும் என்பதும் ஒரு இரகசியம்!

“சின்னச் சின்னதா இன்னொரு மீன் இருக்குமே முழுசா சாப்பிடற மாதிரி. அது என்ன?” — அண்ணா.

“அது சென்னா குன்னி” -வில்லாளன்.

“அது இல்லேய்யா-வெற ஒண்ணு. அது பேரு...”

“நெத்திலியா? (நெற்றிலியா?)” —இது நான்.

“ஆமா அதேதான்! அது கூட எனக்குப் பிடிக்கும்” என்று அண்ணா சொன்னதும் என் மூளையில் எழுதிக் கொண்டேன். இதை மட்டும்!

“தெற்குச் சீமையில் நல்ல தண்ணிரில் மிகச்சிறிய அம்பிர்ைமீன் கிடைக்கும். அதையும் முழுசாகச் சாப்பிடலாம். கடல் நீரில் நெத்திலி மீன் இருக்கும். பச்சையாக்வும், கருவாடாகவும் சாப்பிடுவார்கள்” என்று என் பரந்த அனுபவத்தைக் காட்டிக் கொண்டேன்.

ஐந்து நாட்களுக்கொரு முறை அலுவல் நிமித்தம் சென்னை செல்பவன் நான். அப்போதெல்லாம் நெத்திலிக் கருவாட்டை ஒரு காகிதப் பையில் நிரப்பி, நாற்றத்தை மறைக்கக் கருவேப்பிலைத் தழைகளை நிறையச் சுற்றி, மேலேயும் தாளைப் போட்டு, நன்கு சிப்பமாகக் கட்டி எடுத்துக் சென்று, அண்ணாவுக்கு அதாவது அண்ணியிடம் தருவேன்.

நெத்திலித் தருவாட்டில் எத்தனையோ ரகம் உண்டு டியூர்தரமான முதல் நிலைக்கருவாடு பொன்னிறமுள்ளது.