பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

79


“இதான் எனக்குப் பிடிக்காத சங்கதி! திருச்சி மாநாட்டில என்ன தீர்மானம் போட்டோம்? கருப்புச் சட்டைப் படைன்னு ஒரு வாலண்ட்டியர் படை அமைக் கிறதாத்தானே! உன்னைத்தானே அதுக்கு அமைப் பாளராப் போட்டார் அய்யா. மேடைப் பேச்சாளரும் கருப்புச் சட்டை போடணும்னு தீர்மானம் போட்டோமா?” -அண்ணா கேள்வியில் சிறிது வெறுப்பும் உணர்ந்தேன்.

நான் அமைதியான மெல்லிய குரலில் அது சரிண்ணா! நம்ம அய்யா வழக்கப்படி (Resolution) தீர்மானத்தை விட, அதற்கு மேம்பட்ட வழக்கத்துக்கு, அதாவது கன்வென்ஷனுக்குதானே (Convention) மதிப்பு அதிகம் என்றேன்.

“போய்யா-இது கன்வென்ஷன் இல்லே, கம்ப்பல்ஷன். (Compulsion) விருப்பத்துக்கு விரோதமா கட்டாயப் படுத்துறதுதான்! ஆனாலும், இப்ப எங்கிட்ட கருப்புச் சட்டையில்லியே; நான் மேடைக்கி வராம இருந்துடறேனே!” என்றார். “அய்யய்யோ அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க அண்ணா! சரவணன்! உங்க கருப்புச் சட்டையில ஒண்ணு குடுங்க!” என்று அவரிடம் ஒடினேன். “எங்கிட்ட காலர் வச்ச சட்டை,தானே இருக்கு. பரவாயில்லையா?” என்று எடுத்துத் தந்தார்.

வெற்றி எனக்குதான். அண்ணா புதிதாகக் காலர் வைத்த கருப்புச் சட்டையுடன் மேடையில் தோன்றி யதைப் பலரும் வியப்புடன் கண்டு களித்தனர்.

பெரியாரின் உளப்பாங்கைப் புரியாதவரா அண்ணா? இதற்கும் அடுத்தபடியாக, மே திங்கள் 11, 12 நாட்களில் மதுரையில் கருப்புச் சட்டைப் படையின் முதல் மாநில மாநாட்டை அண்ணாதானே திறந்து வைத்தார்? அங்கு தானே வைத்தியநாதய்யர் கும்பல், தீ வைத்துப்