பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அண்ணா—சில நினைவுகள்


யார்க்கும் தெரியாது. காரணம் திருச்சி மாநாட்டுப் பணிகளைக் கவனிக்கக் கலைஞரும் முன்கூட்டியே வந்து தங்கி யிருந்து, தினமும் அண்ணா இருக்கும் பங்களாவுக்கு வருவார். தான் பொறுப்பேற்று ஆலோசனை வழங்கிய கண்காட்சிக்கான அலுவல்களைப் பார்த்து, ஒவியர்களிடம் வேலை வாங்குவார்.

அண்ணா எப்போதும் அறிவியலின் அடிப்படைகளிலே அமையக் கூடிய ஓவியக் கலைக் காட்சியில் மிகுந்த அக்கறை காண்பிக்கும் வழக்கம் உள்ளவர். அங்கும் அப்படித்தான். தமது கற்பனையில் உதித்த புதியதொரு ‘ஐடியா’வைச் செயலாக்க, என்னுடைய பணியை விரும்பி னார். பந்தலைச் சுற்றிலும் நான்கு புறமும் பனைமரங் களை நட்டு, ஆறடி அகலமுள்ள சணல் கேன்வாஸ் துணி களை நீளமாக அவற்றின்மீது சுற்றி, அது ஒரு கோட்டை மதிற்கூவர் போல் காட்சியளிக்க வேண்டுமாம். நிறையப் பனைமரங்களைத் துண்டு போட்டுக் கொண்டு வருமாறு அன்பில் தர்மலிங்கத்திடம் சொல்லியிருந்தார். கேன்வாஸ் படுதாக்களை ஏராளமாக வாங்கி வர எம். எஸ். மணியிடம் சொன்னார் ; அவை மட்டும் முன்னதாக வந்துவிட்டன! பலவிதமான கலர் பவுடர்களை எடுத்துத் தனித்தனியே கரைத்துத் தரச் சொன்னார் ஓவியர்களை, அண்ணா வோடு வந்திருந்த சிறுவன் C. N. A. இளங்கோவன் எனக்குத் துணை. இளங்கோவும் நானும் பிரஷ்களை வர்ணத்தில் தோய்த்துக் கையை அசைத்து அசைத்து அந்தப் படுதாக்களில் துளித் துளியாகத் தெளிக்க வேண்டும் (Hand Spray). புள்ளி புள்ளிகளாகப் பல நிறங்களில் அவை விழுந்து, தூரத்திலிருந்து பார்த்தோமானால், கற்சுவர் போன்றே தோன்றும்! அண்ணா முதலில் செய்து காட்டி னார்கள். எங்களால் இயன்றது தினமும் கை ஒயும் வரை வர்ணம் தெளித்துப், படுதாக்களைக் காயவைத்து, அன்றாடம் மாலையில் அவற்றைச் சுருட்டி வைப்பது! இப்படியாக நாங்கள் இருவருமே பல நாட்கள் முயன்று,