பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தேதி கொடுக்க நிபந்தனையா?

“உனக்கு மன்னார்குடியில், 9.9.48 அன்று, பெண் வீட்டில் திருமணம் முடிவு செய்துள்ளோம். உன் அபிப்பிராயம் தெரிவிக்கவும்” —என்று என் தந்தையாரிடமிருந்து கடிதம் வந்தது நான் ஈரோட்டில் ஆர். எம். எஸ். சார்ட்டர். அன்பின் இருப்பிடமான என் தகப்பனாருக்கு எதிரில் நான் உட்காருவதில்லை; நேராக நின்றும் பேசுவதில்லை! அதே மரியாதை என் குடும்பத்தில் இன்றும் நிலவுகிறது. அதனால், நான் ஒரே வரியில் பதில் எழுதி னேன்:- “சுயமரியாதைத் திருமணம் நடத்த வேண்டும்; பெரியாரும் அண்ணாவும் வருவார்கள் என்று பெண் வீட்டாரிடம் சொல்லி விடவும்.”

ஆனால், என்ன காரணத்தாலோ, என் நிபந்தனையை என் வருங்கால மாமனார் காதில் முழுமையாகப் போடவில்லை என்பது, திருமணத்தன்றுதான் எனக்குத் தெரிய வந்தது.

திருமணத்துக்கான தேதி நிச்சயிக்கப்பட்டு விட்டது. நான் அய்யா வீட்டுச் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்த காலம் அது. அந்த நம்பிக்கையில், அய்யா அவர்களிடம் செய்தி சொல்ல மகிழ்வுடன் சென்றேன். கேட்டவுடன் மிகவும் களிப்புற்ற தந்தை பெரியார் அவர்கள், மணியம்மையாரை அழைத்து “மணி! தெரியுமா சேதி? நம்ம கருணானந்தம் இப்போ மாப்பிள்ளையாயிட்டார்” என்று சொல்லிக் கேலி பேசிவிட்டு, என்னைப் பார்த்துத், “தேதி என்ன சொன்னே?” எனக் கேட்ட வண்ணம் டயரியைப் புரட்டிக் கொண்டே வந்தவர்கள், “ஆகா—போச்சு போ! அண்ணக்கிதான் முல்லைக் கொம்மை வடிவேலு திருமணம்—நம்ம தொகரப்பள்ளி கிருஷ்ண