உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா ஜோதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


காத்திட என் மகன் வீரம் விளைவித்து, விழுப்புண ஏற்று, சாவில் வீழ்ந்து சாகாப் புகழ் பெற்றான் என்ற செய்தி இன்னும் வரவில்லையே என ஒரு தாய் ஏக்கம் கொண்டு புலம்பினாள் என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது! மகனைப் பெற்ற மகிழ்ச்சியை விட, மகன் களத்தில் மார்பில் காயமுற்று மடிந்தான் என்பதிலேயே அதிக மகிழ்ச்சியுற்றனர் சங்க காலத் தமிழன்னைகள் என விளக்கும் புறநானூற்று வரிகளைப் படிக்கும் போதெல்லாம் புல்லரிக்கிறது உடல்! வீரமிகு கவிதைகளையும் தீரமிகு வரலாறுகளையும் படித்துப் படித்து அந்தப் படைவீரர் பட்டியலில் இடம் பெற்று வாழ்வை நிறைவுபடுத்துவதன்றோ- வையத் தில் நாம் பெற்றிடும் பெரும் பேறு எனத் துடித்தது இளம் உள்ளம்! எனக்கு மட்டுமல்ல; எத்தனையோ இளைஞர் களுக்கு! அவர்களிலே பலர் இன்று நமது கழகத்தின் தூண்களாகத் திகழ்கிறார்கள்! கூட்டங்கள் நடத்துவதில் எத்துணை ஆர்வம்! அதற்கென விளம்பரச் சுவரொட்டிகளை இரவெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_ஜோதி.pdf/18&oldid=1718263" இலிருந்து மீள்விக்கப்பட்டது