பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அதிகமான் நெடுமான் அஞ்சி


“நான் தகடூரில் இருக்கிறவள்; கோட்டைக்குள் வேலை செய்து கொண்டிருந்தவள்.”

அறிவாளியாகிய காரி அவள் மிகவும் பயனுள்ள செய்தியைச் சொல்ல வந்திருக்கிறாள் என்பதை நம்பினான். பிட்டங் கொற்றனை அனுப்பி விட்டு அரசனிடம் அவளை அழைத்துக்கொண்டு சென்றான். அப்போது தான் அரசன் வெளியிலிருந்து வந்து அமர்ந்திருந்தான். அரசனைக் கண்டவுடன் அந்தப் பெண் கும்பிடு போட்டாள். “யார் இவள்?” என்று கேட்டுக்கொண்டே அவளை ஏற இறங்கப் பார்த்தான் அரசன்.

“இவள் ஏதோ இரகசியமான செய்தியைச் சொல்ல வந்திருக்கிறாளாம். இவளை நம்பலாமென்று எனக்குத் தோன்றுகிறது” என்று அரசன் காதில் மட்டும் கேட்கும்படி சொன்னான் காரி.

“என்ன சொல்ல வந்தாய்?” என்று அவளைக் கேட்டான் அரசன்.

அவள் பேசாமல் காரியைப் பார்த்தாள் ; அரசன் அவள் குறிப்பை உணர்ந்து கொண்டான். “அவர் இருக்கலாம். அவர் அறியாத மந்தணம் ஒன்றும் இங்கே இல்லை” என்றான். காரியோ, “நான் சற்றே புறத்தில் இருக்கிறேன்” என்று சொல்லிச் சேரன் ஏதாவது சொல்வதற்குமுன் வெளியே போய்விட்டான்.

அந்த இளம் பெண் பேசத் தொடங்கினாள். “எனக்குக் கோட்டையின் அமைப்பெல்லாம் தெரியும்; இரகசியமும் தெரியும். உங்களுக்கு அது பயன்படும் என்று எண்ணிச் சொல்லத்தான் வந்தேன்.”

“என்ன பெரிய இரகசியத்தை உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்க முடியும்?”

“அப்படி எண்ணக்கூடாது, மன்னர் பெருமானே! சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும். செய்தி