பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வஞ்ச மகள் செயல்

105


என்று சொன்னேனேயன்றி, நாம் அறிந்த இரகசியத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லையே!”

“உமது பேச்சு எனக்கு விளங்கவில்லை.”

“விளங்கும்படி சொல்கிறேன். இதுவரையில் நாம் அறியாமல் மயங்கியிருந்த ஒன்று இப்போது நமக்குத் தெளிவாகியிருக்கிறது. அதிகமான் இத்தனை காலம் உள்ளே இருந்து வருவதற்கும், உணவு பெறுவதற்கும் உரிய துணை என்ன என்று நமக்குத்தெரியாமல் இருந்தது; இப்போது தெரிந்துவிட்டது. அவனுக்கு உணவு செல்வதைத் தடுக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். அந்தச் சுருங்கை நமக்குப் பயன்பட வேண்டாம்; அதிகமானுக்கும் பயன்பட வேண்டாம். இதுவரையில் அது நமக்குப் பயன்படவில்லை; அதிகமனுக்குப் பயன்பட்டது. இப்போது அதனால் அவனுக்குப் பயன் கிட்டாமல் செய்துவிட்டால் உணவு வராமல் திகைப்பான். உள்ளே இருப்பவர்கள் பட்டினியால் வாடுவார்கள். ஒன்று, எல்லோரும் இறந்து போவார்கள்; அல்லது வெளியே வந்து நம்மோடு போர் செய்வார்கள்.”

“நல்ல அறிவு உமது அறிவு! நல்ல யோசனை! அப்படியானல் அந்தச் சுருங்கையில் நம் காவலரை வைத்துப் பாதுகாக்கச் செய்யலாமா?”

“அதுகூட வேண்டியதில்லை. அந்த வழியை அடைத்துவிட்டு, யாராவது ஒருவனைச் சும்மா அந்தப் பக்கத்தில் உலாத்திக் கொண்டிருக்கச் செய்தால் போதும்.”

அதிகமான் அன்று தன் மனைவி கூறியதைக் கூர்ந்து கவனிக்காமல் பேசிய பேச்சு இப்படி விளைந்தது. ஏழைப் பெண்ணின் குறையைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்த செயல் அவனுக்கே தீங்காய்