பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர் மூளுதல்

109

போது அந்த வாய்ப்புக் கிட்டிவிட்டது. நம்முடைய விற்கொடியின் பெருமையையும் சேரர் மரபின் மானத்தையும் காப்பாற்ற வேண்டும். நம் படை வலிமையிற் பெரிது. நெடுங்கேரளனை நாம் களப்பலியாகக் கொடுத்துவிட்டோம். அதனால் இனி நம் பக்கந்தான் வெற்றி உண்டாகப் போகிறது” என்று அந்த வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் வீரர்களுக்கு ஊக்கம் மூட்டினான்.

போர் நடந்து கொண்டிருந்தது. அதிகமான் கை வலுத்திருந்தது. பிட்டங் கொற்றன் படைத் தலைமை பூண்டான். போரின் போக்கு மாறவே இல்லை. இரு மருங்கும்சோர்வின்றிப்பொருதனர்வீரர்கள். யானைகள் வீழ்ந்தன; குதிரைகள் குலைந்தன; வீரர் சிலர் வீழ்ந்தனர். மான உணர்ச்சியினால் உந்தப்பட்டு வீரர்கள் போரிட்டனர். இப்போது காரியே ஒரு பெரிய படைக்குத் தலைமை ஏற்றுப் புறப்பட்டு விட்டான். அப்போது சேரர் படையில் ஒரு புதிய மிடுக்கு உண்டாயிற்று. முன்பு தோற்று ஓடினவன்தானே என்று அதிகமான் படை காரியைக் கண்டு முதலில் இகழ்ந்தது. ஆனால் பிறகு அவனுடைய பேராற்றலைக் கண்டு அஞ்சியது. அதிகமான் படையில் இருந்த சில சிறிய படைத் தலைவர்கள் வீழ்ந்தனர்.

அப்போது துணைப் படை வந்தால் நலம் என்று தோன்றியது அதிகமானுக்கு. சோழனிடமும் பாண்டியனிடமும் ஆள் அனுப்பித் துணைப் படையுடன் வரவேண்டுமென்று ஓலை போக்கினான். அவர்கள் வந்தால் நிச்சயம் போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அவன் நம்பினான்.

காரியின் வீரம் போர்க்களத்தில் மிகச் சிறப்பாக விளங்கியது. ‘நம்மால் விளைந்த போர் இது’ என்ற எண்ணம் அவன் உள்ளத்திலிருந்து அவனை உசுப்பிக் கொண்டே இருந்தது.அதனால் அவன்பெருவிறலுடன்

அதிக-8