பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர் மூளுதல்

113


அந்தப் பாடல் தகடூர்க்கோட்டை, அகழி முதலியவற்றின் தோற்றத்தையும் சொல்கிறது. மதிலிலிருந்து எய்த அம்புகள் வீழ்ந்து அகழி தூர்ந்து விட்டதாம். அதனால் அது தரை மட்டமாகி அங்கே கன்று மேய்கிறதாம்.

பல்சான் றீரே, பல்சான் றீரே
வீழ்ந்த புரிசைச் சேர்ந்த ஞாயில்
கணையின் தூர்ந்த கன்றுமேய் கிடங்கின்
மல்லல் மூதூர்ப் பல்சான் றீரே! [1]


என்று முதலில் அவர்களை விளிப்பதாக அமைந்திருக்கிறது பாடல்.

அவனைக் காண முடியவில்லையே என்று பல நாள் வருந்தி இளைஞரும் முதியவர்களும் நல்ல நெற்றியையுடைய பெண்களும் இன்னும் கண்டு உவக்கும்படியாக அவன் சுகமே இருக்கிறான். நாழிகைக் கணக்கர்களைக்கூட நாங்கள் உள்ளே விடவில்லை. ஆகையால் நீங்கள் இப்போது பார்க்க இயலாது.

பலநாள் வருந்தி, இளையரும் முதியரும்
நன்னுதல் மகளிரும் இன்னும்கண்டு உவப்ப,
யாமங் கொள்வரும் ஒழிய.[2]

அன்று ஒருநாள் கொல்லுகிற ஆயுதம் குத்தியதாலே குன்று போன்ற மார்பிலே உண்டான விழுப்புண்ணில் நெய்யோடு பஞ்சைச் சேர்த்து வைத்து, பசுமையாக இருக்கிற கரிய கொத்தையுடைய நொச்சி மலரை மதில் காப்பதற்குரிய மலராக அணிந்து,



  1. புறத்திரட்டு. 1341. வீழ்ந்த புரிசை - விரும்பிய மதிலில். ஞாயில் - மதிலின்மேல் உள்ள முடிகள். அங்கிருந்து விடும் அம்புகளால் தூர்ந்த கிடங்கு. கன்று மேய் கிடங்கு. கிடங்கு - அகழி. புரிசையையும் கிடங்கையும் உடைய ஊரில் உள்ள. மல்லல் - வளம்.
  2. யாமம் கொள்வர் - நாழிகைகளேயும் யாமத்தையும் கூறிக் காவல் புரிபவர்.