பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அதிகமான் நெடுமான் அஞ்சிகனம்புகல் ஓம்புமின் தெவ்விர், போர்எதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன் ; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே![1]

(களம்-போர்க்களத்தில். புகல்-புகுதலை. ஓம்புமின்-நிறுத்தி விடுங்கள். பொருநன்-போர் செய்யும் வீரன். வைகல்-கான் தோறும். வலித்த-எண்ணிச் செய்த.)

அதிகமானையே பார்த்துச் சொல்லும் பாட்டு ஒன்று எவ்வளவு அழகாக அவன் வீரப் பெருமையை எடுத்துச் சொல்லுகிறது! அந்தப் பாடல் முழுவதும் கேள்விகள்.“ மலைச்சாரலிலே உள்ள வலிமையை உடைய புலி சினம் மிகுந்தால் அதனோடு எதிர் நிற்கும் மானினம் உண்டோ ?” என்பது ஒரு கேள்வி. “இல்லை” என்று தானே சொல்ல வேண்டும் ? இப்படியே, இல்லை இல்லை என்று சொல்லும்படி சில கேள்விகளைக் கேட்டார் அந்த அறிவுடைப் பெருஞ்செல்வியார். “கதிரவன் சினந்தால் திசை முழுதும் செறிந்த இருள் இருக்குமோ? வண்டி மணலில் ஆழ்ந்தால் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மணலைக் கிழித்துக்கொண்டும் பாறையை உடைத்துக்கொண்டும் சக்கரம் உருளும்படி இழுக்கும் செருக்கையுடைய காளைக்கு இதுதான் எளிய துறை, இது எளிய துறை யன்று என்ற வேறுபாடு உண்டோ ?” என்று வினாக்களை அடுக்கினார். பிறகு இத்தனை வினாக்களையும் அடுக்கியதற்குப் பயனாக உள்ள வினாவையும் கூறினார்; “மதிற் கதவைப் பூட்டும் கணையமரம் போன்ற தோளையுடையவனே, வலிய கையையுடையவனே, நீ போர்க்களத்தில் புகுந்துவிட்டால் உன் மண்ணைக் கைக்கொண்டு வெற்றி முழக்கம் செய்யும் ஆற்றலை