பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதக் கனி

21

“காய் காய்த்தால் அதனைப் பெறப் பலர் முன் வருவார்கள்; அரசனுக்கு விருப்பமானவர்களுக்கே அவை கிடைக்கும்” என்று பேசிக்கொண்டார்கள். நாளாக ஆகப் பிஞ்சுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வந்தன. அதிகமான் மரத்தைச் சென்று பார்த்தான். ஒவ்வொரு நாளும் மரம் அணிகலனை இழந்துவரும் மங்கையைப் போலப் பிஞ்சுகளை உதிர்த்து வந்ததைப் பார்த்தான். யாருக்கு நல்லூழ் இருக்கிறதோ அவர்களுக்குக் கிடைக்கும் என்று எண்ணிப் போய்விட்டான். சில நாட்கள் சென்றன. சில பெரிய பிஞ்சுகளே மிஞ்சின.

நாட்கள் செல்ல, அவைகளும் உதிரலாயின. கடைசியில் ஒரே ஒரு காயே மிஞ்சியது; முதிர்ந்தது. நெல்லிக்கனி பல இருந்தால் யார் யார் உண்பது என்ற சிக்கல் உண்டாக இடம் உண்டு. ஒரே ஒரு கனி தான் நின்றது. அரசனே அதை உண்ணுவதற்குரியவன் என்று யாவரும் எண்ணினார்கள் ; பெரியவர்கள் அதையே சொன்னார்கள். ஒரு நல்ல நாள் பார்த்து மன்னன் அதை உண்ண வேண்டும் என்று சான்றோர்கள் திட்டம் செய்தார்கள்.

அந்த நாள் வந்தது. மரத்திலிருந்து கனியைப் பறித்து வந்தார்கள். அதிகமான் அரண்மனையில் அவன் வழிபடும் கடவுளுக்குமுன் வைத்தார்கள். அதிகமான் பணிந்து எழுந்தான். ஓரிடத்தில் சென்று அமர்ந்தான். கனியை ஒரு பொற்கலத்தில் ஏந்தி வந்தாள் எழிலுடை மங்கை ஒருத்தி; அவன் அருகில் நின்றாள். அவன் உண்ணலாமென்று அதை எடுக்கப் போகும் சமயத்தில் ஔவையார் வந்து சேர்ந்தார். வெயிலில் நெடுந்தூரம் நடந்து வந்திருக்கிறாரென்று தோன்றியது.

அவரைக் கண்டதும் அதிகமான் எழுந்து வரவேற்றான். அவர் இப்போதுஅதிகமான் அரண்மனையில் உள்ள யாவருக்கும் பழக்கமாகி விட்டமையால் தடை