பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அதிகமான் நெடுமான் அஞ்சி

துக் கொள்ளாமல் ஔவையாருக்கு ஈந்த இந்த நிகழ்ச்சியைப் புலவர்கள் அறிந்து பாராட்டினார்கள். மன்னர்கள் அறிந்து மனம் நெகிழ்ந்தார்கள். தமிழுலகமே அறிந்து வியந்தது. அதிகமானை, “அமுதம் போன்ற கனியை ஔவைக்கு ஈந்தவன்” என்று குறித்து மக்கள் புகழ்ந்தார்கள். நெல்லியைப் பற்றிய பேச்சு வரும் இடங்களிலெல்லாம் அதிகமானுடைய பேச்சும் தொடர்ந்து வந்தது. பிற்காலத்திலும் அதிகமானை உலகம் நினைவு கூர்ந்து வருகிறதற்குக் கர்ரணம் அவனுடைய வீரம் அன்று; அவனுடைய ஆட்சித் திறமையன்று, பிற வகையான கொடைகளும் அன்று; அமிழ்து விளை தீங்கனியை ஔவையாருக்கு ஈந்த மாபெருஞ் செயலே.

பல பல வள்ளல்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்தாலும் மிக வியக்கத்தக்கபடி கொடைத்திறத்தில் சிறந்து நின்ற ஏழு பேரை மட்டும் சிறப்பாகச் சேர்த்துச் சொல்வது புலவர்களின் வழக்கமாகி விட்டது. ஏழு பெரு வள்ளல்களாகிய அவர்களைச் சிலர் கடையெழு வள்ளல்கள் என்பார்கள். வேறு இரண்டு வரிசை வள்ளல்களை முதலெழு வள்ளல்கள், இடையெழு வள்ளல்கள் என்று கணக்குப் பண்ணி இவர்களைக் கடையெழு வள்ளல்கள் என்று அவர்கள் சொன்னார்கள். அந்தப் பதினான்கு பேர்களும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் வருகிறவர்கள்; பல நாடுகளில் இருந்தவர்கள். இந்த ஏழு பேர்களே வரலாற்றோடு தொடர்புடையவர்கள்; தமிழ் நாட்டிலே வாழ்ந்தவர்கள்.

ஏழு பெரு வள்ளல்களிலே ஒருவனான எண்ணிப் பாராட்டும் பெருமையை அதிகமான் பெற்றான். முதியவர்கள் கூடத் தாம் நீண்ட காலம் வாழவேண்டுமென்று காயகற்பம் உண்பார்கள்; சாமியார்களையும் சித்த வைத்தியர்களையும் தேடி மருந்து கேட்டு உண்பார்கள். அத்தகைய