பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அதிகமான் நெடுமான் அஞ்சி


“வீரக் குலத்து உதித்த பெண்களின் பெருமையை, பாடிப் பரிசில் பெற்று வாழும் பெண்ணாகிய யான் எப்படி அறிவேன்? ஆயினும், பிறந்தவுடன் குழந்தையைத் தந்தை பார்க்க வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.”

“நான் போர்க்களத்தில் இருக்கும்போது செய்தி வந்தால் உடனே வந்து பார்க்கிறேன்.”

அதிகமான் தான் எண்ணியஎண்ணத்தில் திண்ணமுடையவனாக இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார் ஔவையார். மேலே ஒன்றும் பேசவில்லை. முறைப்படி போருக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றன. அதிகமான் படையெடுத்துவருவதைக்காரிஅறிந்தான்.

பெண்ணையாற்றங்கரையில் இருப்பது திருக்கோவலூர். அதிகமான் படைகள் அங்கே சென்று சூழ்ந்து கொண்டன. மலையமான் ஓரியைக் கொன்று வந்த பெருமிதத்தாலும், பெருஞ்சேரலிரும் பொறையிடம் பரிசில்கள் பெற்ற மன நிறைவினாலும் கூத்தும் பாட்டும் கேட்டு இன்புற்றிருந்தான். மற்றொரு போருக்கு அவன் ஆயத்தமாக இருக்கவில்லை. ஆனாலும் வாயில் கதவை எதிரி வந்து தட்டும்போது சும்மா இருக்க முடியுமா? அவனும் போர் வீரர்களைக் கூட்டினான்; போர் செய்யலானான்.

ஓரியின் படைநிலை வேறு; அதிகமான்படை நிலை வேறு. அதிகமான் பெரிய நாட்டை உடையவன். பெரிய படை அவனுடைய கட்டளையை நிறைவேற்றக் காத்திருந்தது. பல போரிலே வெற்றி பெற்ற படை அது காரியின் படையும் தாழ்ந்ததன்று. ஆயினும் அணிமையில் போரிட்டுக் களைப்புற்றிருந்த சமயம் அது. ஆதலின் இயல்பாக உள்ள ஊக்கம் அப்போது இல்லை. இருப்பினும் மானம் படவரின் உயிர் விடுவது இனிதென்ற கொள்கையினராதலின் கொதித்து எழுந்