பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. இயலும் இசையும்


முடியுடை மன்னர்கள் தம் படைக்கு வலிமை போதாதென்று கருதினால் துணையாக வரவேண்டுமென்று காரியை அழைப்பார்கள். காரியின் துணையிருந்தால் வெற்றி தமக்கே கிடைக்குமென்று நினைப்பார்கள். அத்தகையவனுடைய வீரத்தையும் படை வலிமையையும் எப்படி அளந்து சொல்ல முடியும்? அந்தப் பெரு வீரனை ஊரை விட்டு ஓடச் செய்தான் அதிகமான் என்ற செய்தியை முடி மன்னர்கள் கேட்டார்கள். சோழன் அதிகமானேப் பாராட்டி மகிழ்ந்தான். பாண்டியன் தன் நண்பன் இத்துணை வலிமையுடைய வகை இருக்கிறானே என்று எண்ணிப் பெருமிதம் கொண்டான். பெருஞ்சேரல் இரும்பொறையோ ஒன்றும் தோன்றாமல் மயங்கினான்; வருந்தினான். வீரருலகம் அதிகமானைக் கொண்டாடிப் போற்றியது. புலவர்கள் அவன் வெற்றியைப் பாடினார்கள்.

பரணர் என்னும் பெருங் கவிஞர் அதிகமான் திருக்கோவலூரைத் தாக்கிக் காரியை ஓடச் செய்தான் என்பதைக் கேள்வியுற்று அவனைப் பார்க்க வந்தார். அவனுடைய மகனையும் கண்டு மகிழ்ந்தார். அதிகமானுடைய வீரத்தைப் பல பாடல்களால் பாடினார். அந்தப் பாடல்களைக் கேட்டவர்கள் அவற்றின் சுவையிலே ஆழ்ந்து இன்புற்றார்கள். அதிகமானுடைய நல்லியல்புகள் எல்லாவற்றையும் பல வகையில் பாராட்டிப்பாடிய ஔவையாருக்கு இப்போது என்றும் இல்லாத இன்பம் உண்டாயிற்று. தம்முடைய தம்பியாகவே எண்ணிஅன்புபாலித்த அதிகமானைப் பெரும் புலவர்கள் பலர் பாட வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது. இப்