பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. போரின் தொடக்கம்


திகமானுக்குச் சேர மன்னனிடமிருந்து ஓலையைக் கொண்டு சென்றான் ஒரு தூதுவன். திடீரென்று, “உன்மேல்போரிடவருகிறோம்”என்றுசொல்லலாமா? “நம் நண்பராகிய காரிக்கு உரிய திருக்கோவலூரை அவரிடம் ஒப்பிக்க வேண்டும்; இல்லையானால் போருக்கு எழுவோம்” என்று ஓலை கூறிற்று. சான்றோர்கள் கூறிய அறிவுரையை ஒருவாறு ஏற்றுக்கொண்டு, இந்த முறையில் ஓலைபோக்கினான் பொறையன், அதிகமான் திருக்கோவலூரை மீட்டும் காரிக்கு அளித்துவிட்டால் போரே நிகழாமல் போகுமே என்ற நைப்பாசை அந்தச் சான்றோர்களுக்கு பெருஞ்சேரல் இரும்பொறையோ அதிகமான் பணிந்து வருவான் என்று எண்ணவில்லை. இதுவரையில் தோல்வியையே அறியாமல் வெற்றியிலே வளர்ந்தவன் அவன். அவன் இந்த ஓலையைக் கண்டு, “அப்படியே செய்து விடுகிறேன்” என்று கைப்பற்றிய ஊரைத் திருப்பிக் கொடுக்க முன் வருவானா ?

காரணமின்றிப் போரிட்டான் என்ற பழி வாராமல் இருக்கவே, இவ்வாறு ஒரு தலைக்கீட்டை வைத்து ஓலையனுப்பினான் சேரன். ‘அதிகமான் இசையமாட்டான்; போர் நடக்கத்தான் போகிறது; நமக்கே வெற்றி கிடைக்கும்’ என்று உறுதியாகக் கருதினான்.

தூதுவன் தகடூரை அடைந்தான். அவன் போவதற்கு முன்பே அதிகமானுக்குப் பொறையன் எண்ணம் தெரிந்துவிட்டது. ஒற்றர்கள் சேரன் தலைநகரில் நடைபெறும் போர் முயற்சிகளை அறிந்துவந்து முன்னமே சொல்லியிருந்தார்கள். ஆதலின் பொறையன் போரொடு வருவான் என்று ஒவ்வொரு