பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அதிகமான் நெடுமான் அஞ்சி

உள்ள பொறிகளைச் சீர்ப்படுத்தினான். அம்பு எய்யும் எப்புழைகளைத் தடை ஏதும் இல்லாமல் அமைக்கச் செய்தான். கோட்டைக்குள் இருந்த படை வீரர்களைப் போருக்கு ஆயத்தம் செய்யச் செய்தான். கோட்டைக்குள் இன்றியமையாதவர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியிலே நகரத்தில் போய் இருக்கச் சொன்னான். நகரில் இருந்த வீரர்களையும் படைக்கலப் பயிற்சியுடைய மைந்தர்களையும் அழைத்துக் கோட்டைக்குள்ளே இருக்கும்படி ஏவினான்.

பெருஞ்சேரல் இரும்பொறை படை எடுத்துவந்தால் எதிர் சென்று போரிட்டு அவனை ஓட்டுவதை அதிகமான் விரும்பவில்லை. அதற்குப் பெருமுயற்சி வேண்டும். தன் நாட்டுக்கு வெளியிலோ அல்லது உள்ளேயோ ஒரு போர்க்களம் உருவாகும். கைகலந்து போர் செய்யத் தொடங்கினால் பலர் மடிவார்கள். இவற்றிற்கெல்லாம் இடமின்றிப் பெட்டிக்குள் அடங்கிய பாம்புபோல் கோட்டைக்குள் இருந்தால், சேரன் வந்து கோட்டையை முற்றுகையிடுவான். மதிற்பொறிகளையும், மறைவிடத்திலிருந்து அம்புகளையும் ஏவி அந்தப் படைக்குச் சேதம் விளைவிக்கலாம். பகைப் படைகளால் அகழியைத் தாண்டவோ கோட்டையைக் குலைக்கவோ இயலாது. சில காலம் முற்றுகையிட்டுவிட்டுச் சோர்வடைந்து சேரன் தன் நாட்டுக்கே மீண்டு விடுவான். -இவ்வாறு தன் மனத்துள் ஒழுங்கு பண்ணிக்கொண்டான் அதிகமான்.

வந்த படை நெடுங்காலம் விட்டு அகலாமல் கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிட்டிருந்தால் என்ன செய்வது என்ற கவலை அவனுக்கு இல்லை. இரகசியமாகச் சுருங்கை வழியே உணவுப் பண்டங்கள் வருவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்ற நம்பிக்கை இருந்தது. சான்றோர்கள் இந்தக் கருத்துக்கு இசைந்தார்கள்.