பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அதிகமான் நெடுமான் அஞ்சி

ஊராக் குதிரை என்று புகழ்ந்தார்கள். மக்கள் ஏறிச் செலுத்தும் குதிரை அன்று இது; இது மலை'[1]என்பதை நினைப்பூட்டி அப்படிப் பாடினார்கள்.

அதியர் குலத்தில் வந்தவர்கள் சிவபக்தி நிரம்பிய வர்கள்; மற்றத் தெய்வங்களையும் வழிபட்டு வேண்டிய கடமைகளை ஆற்றுகிறவர்கள். வேள்வி செய்து தேவர்களுடைய அன்பைப் பெற்றவர்கள். சிவபிரானைப் பூசை செய்கையில் அப்பிரானுக்கு அருச்சனை செய்த வில்வத்தைப் பூசை முடிந்த பிறகு தம் தலையில் வைத்துக்கொள்வது ஒரு வழக்கம். அதியர்குல மன்னரில் தலைவர் அப்படிச் செய்தார். பூசை முடிந்து வெளியிலே வந்து வேறு செயல்களை ஆற்றும்பொழுதும் அவர் முடியில் அந்தக் கூவிளம் விளங்கியது. நாளடைவில் அதுவே அவருக்குரிய அடையாளக்கண்ணி யாகிவிட்டது. மார்பிலே தம் குலப் பழமையை நினைவூட்டும் பனைமாலையையும் தலையிலே தம் சிவபக்திச் சிறப்பைக் காட்டும் கூவிளங் கண்ணியையும் அணிந்து வந்தார்.[2] பின்வந்த அரசர்களும் இந்த வழக்கத்தையே மேற்கொண்டனர்.

இந்தக் குலத்தில் வந்த ஒரு மன்னர் தம் நாட்டில் வேளாண்மையைவளப்படுத்த எண்ணினார். தகடூருக்கு அருகில் வாய்ப்பான பேராறு ஏதும் இல்லை. ஏரிகளும் குளங்களும் இருந்தன. அவற்றால் நெற்பயிர் விளைந்தது. நிலத்துக்கு நெல்லும் கரும்பும் சிறப்பை அளிப்பவை; "நிலத்துக் கணி என்ப நெல்லும் கரும்பும்" என்று ஒரு புலவர் பாடியிருக்கிறார். அக் காலத்தில் நீர்வளம் மிக்க சோழ நாட்டிலும், பாண்டி நாட்டில் சில பகுதிகளிலும் கரும்பைப் பயிர் செய்து வந்தார்கள். தம்முடைய நாட்டிலும் நெல்லைப் போலக் கரும்பையும் கொண்டு வந்து பயிராக்கி நலம் செய்ய வேண்டுமென்று அந்த மன்னர் எண்ணினார். சோழ நாட்டுக்குத் தக்கவர்களை அனுப்


  1. புறநானூறு,168.
  2. புறநானூறு, 158.