பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. அந்தப்புர நிகழ்ச்சி


ப்போது அதிகமானுடைய அரண்மனையில் முன்னே நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சிக்கு இலக்கிய ஆதாரம் ஒன்றும் இப்போது கிடைக்கவில்லை. ஆனாலும் அதிகமான் கோட்டை என்று இப்போது வழங்கும் ஊரில் வாய்வழிச் செய்தியாக இந்த வரலாறு வழங்கி வருகிறது.

அதிகமானுடைய அரண்மனை கோட்டைக்குள் இருந்தது. அங்கே அந்தப்புரமும் இருந்தது. அவனுடைய மனைவியும் அதிகமானுக்கு உறவினராகிய பெண்மணிகளும் அந்தப்புரத்தில் இருந்து வந்தார்கள். அவர்களுக்கு ஏவல் செய்யப் பல வேலைக்காரிகள் இருந்தார்கள்.

அரண்மனையில் உள்ளவர்களின் துணிகளை வெளுக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் ஆடை வெளுப்பவர்களின் தலைவன். அவனிடம் பலர் வேலை செய்தார்கள். அந்தப்புரத்துத் துணிகளை ஆடவர் வெளுப்பதில்லை. சலவைத் தொழிலாளர் குலப் பெண்களே வெளுத்துவந்தார்கள். அதிகமானுடைய மனைவியின் ஆடைகளை வெளுப்பதற்குத் தனியே ஒரு சலவையாளர் குலப்பெண்ணை அமர்த்தியிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவள் அந்தப்புரத்துக்கு வந்து வெளுப்பதற்குரிய துணிகளை எடுத்துச் செல்வாள்.

அரண்மனையில் வேலை செய்கிறவர்களுக்குத் தனியே மானியம் கொடுத்திருந்தார்கள். இது அந்தக் கால வழக்கம். அங்கே பல வகையான ஏவல்களைச் செய்கிறவர்கள் பரம்பரை பரம்பரையாக ஊழியம்