பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தப்புர நிகழ்ச்சி

87

வரும்போது அவளையும் அழைத்து வருவாள் தாய். தாய்க்கு முதுமை வந்துவிட்டது. அந்தப்புரம் செல்வதை அவள் நிறுத்திக்கொண்டாள் : தனக்குப் பதிலாகத் தன் மகளை அனுப்பினாள்.

நன்றாக வளர்ந்து அழகியாக நின்றாள் அந்தப்பெண். பருவத்தின் மெருகு அவள் மேனியிலே ஒளிர்ந்தது. அதிகமானுடைய மனைவிக்கு அவளிடம் தனியன்பு ஏற்பட்டது.தன்னுடைய ஆடைகளில் பழையனவற்றை அவளுக்குக் கொடுப்பாள். அதை உடுத்துக்கொண்டு அவள் நின்றால் அரசி அவளைப் பார்த்துப் பார்த்து இன்புறுவாள். “அடிபெண்ணே, நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய்! அரசியாகப் பிறக்கவேண்டியவள், வேறு குடும்பத்திலே பிறந்துவிட்டாயே! பிரமன் சிறிது நாழிகைக்குமுன் உன்னைப் படைத்திருந்தால் நீ எந்த மன்னனுடைய அந்தப்புரத்தில்இருப்பாயோ!” என்பாள்.

“போங்கள் அம்மா! என்னை ஏன் இப்படிப் பரிகாசம் செய்கிறீர்கள்? அப்படி ஏதாவது இருந்தால் உங்கள் அரண்மனைச் சோறுதான் காரணம்” என்பாள். அவளுக்கு அடிக்கடி அரண்மனை மடைப்பள்ளியிலிருந்து உணவையும் சிற்றுண்டிகளையும் அரசி கொடுக்கச் செய்வது வழக்கம்.

“உன்னையும் என்னையும் பார்த்தால் உன்னைத் தான் அரசியென்று தெரியாதவர்கள் நினைப்பார்களடி!” என்று அரசி பாராட்டுவாள்.

“அப்படியெல்லாம் சொன்னால் எனக்குக் கோபம் வரும், அம்மா!” என்றுபொய்யாகக்கடிந்து கொள்வாள் அந்த இளம் பெண் ; ஆனால் அவள் உள்ளத்துக்குள் பெருமை பொங்கும். சிறு பெண்தானே? அந்தப் பெண் அரசி சொல்வதையெல்லாம் வீட்டுக்குப் போய்த் தன் தாயிடம் சொல்வாள். அவள் மகிழ்ச்சிக் கடலில்