பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தப்புர நிகழ்ச்சி

89

அதன் இரண்டு முனைகளையும் கவனித்தாள், துணை சென்ற இளம் பெண்.

ஒரு நாள் அவள் அரண்மனைக்குள் நுழைந்து அந்தப்புரத்துக்குப் போய்க்கொண்டிருந்தாள். அப்போது அரசிக்குத் தம்பி முறையாகும் ஒருவன் பார்வை அவள் மேல் விழுந்தது. அவன் அண்ரமனை அதிகாரிகளில் ஒருவனாக வேலை பார்க்கிறவன். அவன் தன் கண்களை நம்பவில்லை. ‘இப்படியும் ஓரழகி இங்கே இருக்கிறாளா?’ என்று வியந்தான். அது முதல் அவள் வருவதையும் போவதையும் கவனித்தான். அரசிக்குத் துணி வெளுப்பவள் என்பதைத்தெரிந்துகொண்டான். அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு உள்ளம் ஏதோ செய்தது.

ஒரு நாள் அவள் அந்தப்புரத்திலிருந்து தன் வீட்டுக்குச் செல்லும்போது ஒதுக்கமான இடத்தில் அவள் போகும் வழியில் நின்றான். அவள் அணுகும் போது, “ஏ பெண்ணே, சிறிது நில்; உன்னுடன் சில வார்த்தைகள் பேச வேண்டும்” என்றான், அறிவாளியாகிய அந்தப் பெண் அவன் பார்வையையும் குரலின் குழைவையும் கொண்டு அவன் இயல்பை உணர்ந்து கொண்டாள்; மறுமொழி பேசாமல் சென்றுவிட்டாள்.

அவன் இன்னும் சில நாள் கழித்து அவளை வழி மறித்தான். அவள் அந்தப்புரத்துக்குச் செல்லாமல் திரும்பிப் போய்விட்டாள். அன்று அவளைக் காணாத அரசி காரணம் தெரியாமல் திகைத்தாள்.அவள் உடம்புக்கு நோய் வந்துவிட்டதோ என்று அஞ்சினாள். அவள் வீட்டுக்கு ஆளை அனுப்பி விசாரித்து வரச் சொன்னாள். உடம்பு சரியில்லையென்றும், மறுநாள் வருவதாகவும் சொல்லியனுப்பினாள் அவள்.

மறுநாள் துணைக்கு ஒரு கிழவியை அழைத்துக் கொண்டு அவள் அரண்மனை சென்றாள். அந்தப்புரத்துக்கும் போனாள். உடன் வந்த கிழவியை வெளி