பக்கம்:அதிசயப் பெண்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசயப் பெண்

அவன் சுகுமாரன் என்று பெயருடையவன். வித்தியாதரரிடத்தில் பேசிக்கொண் டிருந்தான். வித்தியாவதியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை மெல்ல வெளியிட்டான். அவர் வழக்கப் படியே அவள் செய்யும் காரியங்களை அடுக்கினார். ‘இவ் வளவு அறிவாளியான இவர் மகள் ஒன்றும் தெரியாதவளாகவோ, பொல்லாதவளாகவோ இருக்கமாட்டாள். இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது’ என்று எண்ணிய இளைஞன், “அவள் என்ன செய்தாலும் சரி; அதனால் நான் வருத்தப்பட மாட்டேன். அவளைக் கல்யாணம் செய்துகொள்ளச் சித்தமாக இருக்கிறேன்” என்றான்.

“யோசித்துச் சொல், அப்பா. பிறகு வருத்தப் படும்படி வைத்துக்கொள்ளக் கூடாது” என்று வித்தியாதரர் சொன்னார்.

“வருத்தம் உண்டாக இடம் இல்லை. என்னை உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் பெண்ணைத் தாருங்கள்; இல்லாவிட்டால் வேண்டாம்” என்றான் அவன்.

வித்தியாதரருக்குச் சுகுமாரனுடைய அழகும் குணமும் பிடித்திருந்தன. வித்தியாவதியை அவனுக்கே மணம் செய்து கொடுத்துவிட்டார்.

வித்தியாவதியும் சுகுமாரனும் மனைவியும் கணவனுமாகக் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார்கள். அவள் மிகவும் நன்றாகச் சமைத்தாள். சுகுமாரன் மகா புத்திசாலி. ஆகையால் நாளடைவில், தன் மாமனார்