அதிசயப் பெண் 9.
சொன்ன விஷயங்களின் உண்மையைத் தெரிந்து ட கொண்டான்.
ஒரு நாள், நான் கல்லைப் போட்டுச் சமைப்பேன் என்று என் தகப்பனார் சொன்னரே, நீங்கள் என்னே எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?’ என்று வித்தியாவதி தன் கணவனைக் கேட்டாள். .
சுகுமாரன், ‘உப்புக் கல்லைப் போட்டுச் சமைப்பாபய் என்று தெரிந்துகொண்டேன். உப்பில்லாமல் எப்படிச் சமைக்க முடியும்?’ என்று சிரித்துக்கொண்டே சொன்னான். -
‘சாப்பிட்டால் ஆதார வஸ்துவை எறிந்துவிடுவது உங்களுக்குச் சம்மதந்தானா?’ என்றாள் வித்தியாவதி.
காய் கறி சோறு எல்லாவற்றையும் படைக்கும் இலைதான் ஆதார வஸ்து. சாப்பிட்டால் அதை எறியாமல் என்ன செய்வது?’ என்று சுகுமாரன் சொன்னான்.
வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் நான் கலந்து வைப்பதை நீங்கள் பார்த்ததுண்டோ?’ என்று அவள் கேட்டாள்.
‘தினமுந்தான் செய்கிறாய். வேகாத இலை வெற்றிலே; வெட்டின காப் அடைக்காயாகிய பாக்கு; வெந்த கல் சுண்ணாம்பு; இந்த மூன்றையும் நீ கலந்து தராவிட டால்தான் எனக்குப் பிடிக்காது’ என்று சுகுமாரன் சந்தோஷத்துடன் சொன்னான். -
“அந்தக் குழம்பைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’ என்று வித்தியாவதி அடுத்த கேள்வி கேட்டாள்.