உயர்ந்த பரிசு
13
விலையுயர்ந்த பரிசுகளை இவன் சாதாரணமாக வாங்கிக் கொண்டான். அந்த இடையன் கொடுத்த பழைய கம்பளியை அவ்வளவு சிரத்தையோடு வாங்கிவைத்துக் கொண்டானே! நமக்கு இதனால் அவமதிப்பன்றோ உண்டாகிவிட்டது?” என்று யோசித்தான். அவன் கண்கள் சிவந்தன.
வித்தைகள் செய்து முடிந்த பிறகு கூட்டம் கலைந்தது. அரசன் வித்தையாடியைத் தனியே அழைத்து வரச் செய்தான்; “நீ நாம் கொடுத்த பரிசுகளை அலட்சியமாக வைத்துவிட்டு அந்த இடையன் கொடுத்த பொத்தல் கம்பளியை அவ்வளவு மரியாதையோடு வாங்கிக்கொண்டாயே; நம்மை இப்படி அவமதித்த குற்றத்திற்காக உனக்குத் தக்க தண்டனை அளிக்க உத்தரவிடப் போகிறோம்” என்றான்.
வித்தையாடி : மகாராஜா, தாங்கள் இந்த ஏழையின் மீது அவ்வளவு கோபம் கொள்ளக்கூடாது. நான் செய்த அபசாரத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நான் அவ்வாறு செய்ததற்கு என்ன காரணமென்பதை மாத்திரம் மகாராஜாவுக்கு விண்ணப்பம் செய்துகொள்கிறேன்
அரசன் : என்ன காரணம்?
வித்தையாடி : நான் கோகர்ண வித்தை செய்து காட்டினபோது பலர் என்னைப் பரீட்சை செய்தார்கள். அந்த இடையனும் என்னைப் பரீட்சித்தான். என்மேல் ஒரு சிறு கல்லைப் போட்டான். நானும் அந்தக் கல் விழுந்த இடத்தை மாத்திரம் சுழித்துக்கொண்டேன். பசு