பக்கம்:அதிசயப் பெண்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


டபீர் ஸ்வாமி

[தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் சொன்ன ஊறுகாய்க் கதைகளில் இது ஒன்று.]

கும்பகோணம் காலேஜில் ஐயரவர்கள் இருந்த போது ஆங்கிலம் முதலிய பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியர்களும் அவர்களும் நெருங்கிப் பழகுவார்கள். மனங் கலந்து பேசி இனிமையாகப் பொழுது போக்குவார்கள். அங்கே ஒரு நாள் பல ஆசிரியர்கள் சேர்ந்து அமர்ந்து விநோதமாகப் பேசிக்கொண் டிருந்தார்கள். “இந்த ஊரில் டபீர் தெரு என்று ஒன்று இருக்கிறது. அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? டபிரென்று அங்கே ஏதாவது வெடித்ததா? அல்லது வேறு காரணத்தால் வந்ததா?” என்று ஒருவர் கேட்டார்.

“டபீர் ஸ்வாமி என்ற ஒரு பெரியவர் இருந்தார். அவருடைய பெயரை இட்டு வழங்குகிறார்கள். அநேக