பக்கம்:அதிசயப் பெண்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 . அதிசயப் பெண்

மாக அவர் மகாராஷ்டிரராக இருந்திருப்பாரென்று. தோன்றுகிறது” என்று வேறு ஒர் ஆசிரியர் விடை கூறினார்.

முதலில் கேள்வி கேட்டவர் தொடர்ந்து, “அப்படி யானால், அந்தப் பெயர் அவருக்கு மாத்திரம் எப்படி வந்தது?” என்று வினவினார். -

அந்த வினாவிற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரங்கழித்து அங்கிருந்த ஆர். வி. ஸ்ரீநிவாசையர். என்ற பேராசிரியர் சிறிது கனைத்துக்கொண்டு, நான் சொல்லட்டுமா?’ என்று கேட்டார். கேட்கும்பொழுதே அவர்பால் தோன்றிய புன்னகை அவர் ஏதோ வேடிக் கையாகச் சொல்லப் போகிறார் என்பதைக் குறிப்பித்தது.

“சொல்லுங்கள், கேட்கலாம்” என்று ஆசிரியர் யாவரும் ஒரு முகமாகக் கேட்டார்கள்.

ஸ்ரீநிவாசையர் சொல்ல ஆரம்பித்தார்.

       *       *        *         *       

தஞ்சாவூரில் மகாராஷ்டிர அரசர்கள் ராஜ்யபாரம் நடத்தி வந்த போது அவர்களுடைய உறவினர்கள் பலர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அரண்மனையிலிருந்து ஊதியம் கிடைத்து வந்ததோடு, இயல் பாகவே பொருள் உடையவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறு வாழ்ந்து வந்த மகாராஷ்டிர கனவான்களுள் ஒருவர் மிகவும் சுறு சுறுப்புடையவர். அவருடைய வாழ்க்கைக்குப் போதிய வசதிகள் இருந்தாலும் அவரது சுறுசுறுப்புக்கு ஏற்ற வேலை இல்லாமையால் அவருக்கு,