பக்கம்:அதிசயப் பெண்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டபீர் ஸ்வாமி

21


உற்சாகம் குறையத் தொடங்கியது. அவருடைய மனைவியும் பிறரும் அரண்மனை உத்தியோகம் பெற்றுப் பார்க்கும்படி சொன்னார்கள். அரண்மனை வேலைக்கு ஏற்ற தகுதி அவரிடம் இல்லை. சாமானிய வேலைகளுக்குப் போகவும் அவருக்கு இஷ்டம் இல்லை.

இந்த நிலையில் அவர் திவிரமாக யோசனை செய்ய லானர். தம் கைப் பொருளைச் செலவு செய்தாவது ஏதேனும் உத்தியோகம் செய்யத்தான் வேண்டுமென்ற உறுதி அவருக்குள்ளே தோன்றியது. என்ன உத்தி யோகம் செய்வது? யோசித்து யோசித்துப் பார்த்தார். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு நாளில் இருபத்து நாலு மணி நேரமும் வேலை செய்தாலும் செய்யும் படியான உத்தியோகம் ஒன்றைத் தாமே ஏற்படுத்திக் கொள்ள எண்ணிவிட்டார்.

அரண்மனைக்குப் போகும் சாலையில் அரண்மனைக்குச் சிறிது தூரத்தில் பரந்த வெளியாக இருந்த இடத்தில் ஒரு பகுதியை விலைக்கு வாங்கினார். அங்கே ஒரு சிறிய கட்டிடம் கட்டிக்கொண்டார். நாற்காலி, மேஜை, பேனா, பென்ஸில், மைக்கூடு, காகிதங்கள், குறிப்புப் புத்தகங்கள் முதலிய உபகரணங்களெல்லாம் தம் கைப் பொருளைச் செலவு செய்து வாங்கி நிரப்பி அதைத் தம்முடைய உத்தியோகசாலையாக ஆக்கிக்கொண்டார். நல்ல நாளில், நல்ல வேளையில் சம்பளமில்லாத அந்த உத்தியோகத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். சம்பளம் இல்லாவிட்டால் என்ன? அவருக்குப் பணம் இல் லையா? உத்தியோகம் செய்கிறோம் என்ற உற்சாகமும்,


2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/23&oldid=1064838" இலிருந்து மீள்விக்கப்பட்டது