உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசயப் பெண்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டபீர் ஸ்வாமி

23

வான் செய்துவந்தார். தேதி வாரியாக, மணி வாரியாக நிமிஷ அடைவிலே கடிகாரத்தைப் போல அவர் உத்தியோகம் பார்த்தார். எவ்வளவு பொறுப்புள்ள வேலை!

தம்முடைய உத்தியோகசாலையின் ஜன்னல் வழியே உலகத்தைப் பார்த்து, அதன் பல வேறுபட்ட போக்கு களையும் குறிப்பெடுக்கும் ஆராய்ச்சியாளரைப் போல் அவர் வெகு சிரத்தையுடன் வேலை செய்தார். ‘கலை, கலைக்காகவே’ என்று சொல்வார்களே, அந்த மாதிரி அந்த வேலையை வேறு பயன் எதையும் கருதாமல் அவர் செய்து வந்தார்.

அவருக்குத் தாம் செய்து வந்த உத்தியோகத்தினால் ஏற்பட்ட உற்சாகம் கிடக்கட்டும்! அவர் வீட்டாருக்கோ அவர் ஏதோ பொறுப்புள்ள அரண்மனை உத்தி யோகத்தை ஏற்றுக்கொண்டிருக்கறார் என்ற கெளரவ புத்தி உண்டாயிற்று. இவர் என்ன செய்கிறார்? என்று அறிய எண்ணிய யாரோ சிலர் அவர் ஏகாக்கிர சித்தத்தோடு வேலை செய்வதைப் பார்த்து, இடையிட விரும்பாமல் போய்விட்டார்கள். அவர் உத்தியோகம் யாதொரு தடையுமின்றி இவ்வாறு நடைபெற்று வந்தது.

ரு நாள் அரண்மனையில் ஒரு தங்கப் பாத்திரம் காணாமற் போயிற்று. எங்கெங்கோ தேடிப் பார்த்தார்கள்; கிடைக்கவில்லை. யார் திருடினார்கள் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. பலவகையில் ஆராய்ச்சி செய்து விசாரித்தபோது அன்று மாலையில் அதை யாரோ ஒருவன் எடுத்துப் போயிருக்கிறான் என்று தெரியவந்தது. அரண்மனைக்கு அடிக்கடி வந்து போகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/25&oldid=1104939" இலிருந்து மீள்விக்கப்பட்டது